ADVERTISEMENT

ஏப்ரல் 15 முதல் காலாவதியான இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிக்கலாம்..!!! துணைத்தூதரகம் அறிவிப்பு..!!!

Published: 14 Apr 2020, 5:20 PM |
Updated: 14 Apr 2020, 5:24 PM |
Posted By: jesmi

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் (Consulate General in Dubai) ஏப்ரல் 15 முதல் ஷார்ஜாவில் உள்ள BLS சென்டர் மூலம் இந்தியர்களுக்கான குறிப்பிட்ட பாஸ்போர்ட் சேவைகளை மட்டும் மீண்டும் தொடங்குவதற்கான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதன் படி, ஆரம்பக்கட்டமாக காலாவதியான பாஸ்ப்போர்ட்கள் அதாவது ஏப்ரல் 30, 2020 அன்று அல்லது அதற்கு முன்னராக காலாவதியான பாஸ்ப்போர்ட்களை புதுப்பிப்பதற்கான சேவைகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க தனது நாட்டு குடிமக்கள் விண்ணப்பிக்கக்கூடிய வழி முறைகளையும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பட்டியலிட்டுள்ளது.

  • பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களின் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான அவசரநிலை குறித்த விளக்கத்துடன் passport.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதனை தொடர்ந்து, ஷார்ஜாவில் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளுக்கான BLS மையத்திற்கு செல்ல அப்பாயின்ட்மென்ட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், தூதரகம் வெளியிட்டுள்ள ஆலோசனையின்படி, மையத்திற்கு வருவதற்கு முன்பு விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு தேவையான அனைத்து ஆவணங்களையும் அதனுடன் இணைத்து கொண்டு வருமாறு கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பையொட்டி இந்திய துணை தூதரகம் பாஸ்போர்ட் சேவைகளை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT