ADVERTISEMENT

Emirates Loto-வின் முதல் குலுக்கலில் 3,50,000 திர்ஹம் ரொக்க பரிசை வென்ற இந்தியர்..!!!

Published: 22 Apr 2020, 10:13 AM |
Updated: 22 Apr 2020, 11:56 AM |
Posted By: jesmi

கடந்த வார இறுதியில் நடைபெற்ற எமிரேட்ஸ் லோட்டோவின் (Emirates Loto) முதலாவது குலுக்கலில் (draw) துபாயைச் சேர்ந்த இந்திய வெளிநாட்டவர் முகமது காலித் 3,50,000 திர்ஹம் ரொக்கப் பரிசை வென்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த டிராவில் ஆறு எண்களில் ஐந்து எண்கள் பொருந்தி பரிசை வாங்கும் ஒரே நபர் அவர் ஆவார்.

ADVERTISEMENT

தனது சொந்த நாடான இந்தியாவில் இருந்து துபாய்க்கு 20 வருடங்களுக்கு முன்னர் வந்து தொலைத்தொடர்பு பொறியாளராக வேலை செய்யும் காலித், எமிரேட்ஸ் லோடோவில் (Emirates Loto) வென்றதை முதலில் அறிவித்தபோது அவரது குடும்பத்தினர் அதனை நம்பவில்லை என்று கூறியுள்ளார். இது பற்றி காலித் கூறும்போது “எங்கள் எண்கள் பொருந்தியிருப்பதைக் கண்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், இது உண்மையில் நடக்கிறதா என்று தெரியவில்லை. எமிரேட்ஸ் லோட்டோ எங்களை அழைத்தபோதுதான் நாங்கள் வென்றோம் என்பது எங்களுக்கு உண்மையிலேயே தெரியும்” என்றார் காலித்.

மேலும் அவர் கூறும் போது “எனது பரிசில் பெரும் பகுதியை ’10 மில்லியன் ரமலான் உணவு’ (10 million meals) பிரச்சாரத்திற்கு நன்கொடையாக வழங்க உத்தேசித்துள்ளேன். இது மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் [ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளரும்] மற்றும் ஷைகா ஹிந்த் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஆகியோரால் அறிவிக்கப்பட்டது. நான் இறுதியாக தற்பொழுது மற்றவர்களுக்கு உதவக்கூடிய ஒரு இடத்தில் இருக்கிறேன், இதன் மூலம் நான் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் லோட்டோ தலைமை நிர்வாக அதிகாரி பால் செபஸ்டியன் “எமிரேட்ஸ் லோட்டோவின் மூலம், நாங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். முகமது காலித் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்ற முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவருடைய தாராள மனப்பான்மைக்கு நன்றி, அவர் மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றுவார். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ” என்று தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ் லோடோவின் அடுத்த டிரா வரும் சனிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ரமலான் மாதம் ஆரம்பித்து விடும் என்பதால் அந்த மாதம் முழுவதும் இரவு 10 மணிக்கு டிரா நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் லோடோவைப் பற்றிய கூடுதல் தகவல்களை www.emiratesloto.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT