ADVERTISEMENT

அமீரகத்தில் நாளை முதல் புனித ரமலான் நோன்பு தொடக்கம்..!!!

Published: 23 Apr 2020, 4:09 PM |
Updated: 23 Apr 2020, 4:18 PM |
Posted By: jesmi

ரமலான் மாதத்திற்கான முதல் பிறை இன்று பார்க்கப்பட்டதாக சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பிறை பார்ப்பது தொடர்பான சந்திப்பிற்கு பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து, நாளை முதல் (ஏப்ரல் 24) ரமலான் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் 30 நாட்கள் நோன்பு நோற்று இம்மாதம் முழுவதும் இறை வணக்க வழிபாடுகளிலும், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதிலும் ஈடுபடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் மசூதிகளில் சிறப்பு தொழுகைகள், இரவு நேர வணக்க வழிபாடுகள், மசூதிகளில் நோன்பு திறக்க ஏற்பாடு, நோன்பு நோற்றவர்கள் நோன்பை திறக்கும் விதமாக பல்வேறு இடங்களில் டென்ட் அமைத்தல் என பல்வேறு சிறப்பம்சங்கள் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனாவின் பாதிப்புகளையொட்டி இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக வானியல் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஸ் அல் கைமாவின் உயரமான ஜபேல் ஜைஸ் மலையின் உச்சியில் இருந்து பிற்பகல் 12.02 மணிக்கு பிறை பார்க்கப்பட்டதாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT