ADVERTISEMENT

ஓமானில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் விண்ணப்பிக்கலாம்..!! இந்திய தூதரகம் அறிவிப்பு..!!

Published: 30 Apr 2020, 6:35 PM |
Updated: 30 Apr 2020, 6:40 PM |
Posted By: jesmi

வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவூதி அரேபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளை போலவே ஓமான் நாட்டிலுள்ள இந்திய தூதரகமும் அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களில் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பும் நபர்களின் விபரங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை ஓமான் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்தியா செல்ல விரும்பும் நபர்கள் தூதரகம் சார்பாக வெளியிட்டுள்ள வலைதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இந்திய குடிமக்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான விமான சேவை தொடங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் போது, இந்திய தூதரகம் அது குறித்த ஒரு முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் ஒரு நபருக்கான தகவல் மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் ஒரே குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தனித்தனி படிவங்களை நிரப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஓமானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், படிவத்தை நிரப்பும்படி கேட்டுக்கொள்வது தகவல் சேகரிப்புக்காக மட்டுமே என்றும், இதனால் இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் பதிவு செய்யப்படுவதாக அர்த்தம் இல்லை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியா செல்ல விரும்பும் ஓமானில் வசிக்கும் மக்கள் bit.ly/2Sl45AS என்ற வலைதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT