ADVERTISEMENT

இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. துபாய் ட்யூட்டி ஃப்ரீ டிராவில் இரண்டாவது முறையாக வெற்றி..!!

Published: 1 Feb 2023, 7:49 PM |
Updated: 1 Feb 2023, 9:32 PM |
Posted By: Menaka

துபாயில் நடைபெற்று வரும் டூட்டி ஃப்ரீ டிராவில் ஏற்கெனவே வெற்றி பெற்று பரிசுத்தொகையை வென்ற இந்தியர் ஒருவர் இரண்டாவது முறையாக வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். 48 வயதான அமித் என்பவர் ஏற்கனவே, 2016 ஆம் ஆண்டில் டூட்டி ஃப்ரீ டிராவில் $1-மில்லியன் (Dh3.67-மில்லியன்) என்ற மெகா பரிசுத் தொகையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அமீரகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை நடத்தி வரும் அமித், துபாய் டூட்டி ஃப்ரீ மூலம் வெற்றி பெற்றதால், துபாய்க்குச் செல்லவும், எதிர்காலத்தைப் பற்றி நிஜமாகவே சிந்திக்க முடிவதாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இரண்டு முறை டிராவில் வென்ற மகிழ்ச்சியில் பேசத் தொடங்கிய அவர், உலகிலேயே மிக உண்மையான ப்ரோமோஷன்களில் இதுவும் ஒன்று என தான் எப்போதும் நம்புவதாகவும், இரண்டு முறை அதிர்ஷ்டசாலியாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் டிராவில் தவறாமல் பங்கேற்கும் அமித், இத்தகைய வெற்றிப் பரிசை அளித்த துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமித் மெகா பரிசை வென்று மில்லியனர் ஆன பிறகு பெங்களூரிலிருந்து துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளார். அத்துடன் இந்தியாவின் தலைநகரான புது டெல்லிக்கு செல்லும் வழியில் 1829 ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸிற்கான ஆறு டிக்கெட்டுகளை வாங்கிய பிறகு அமித் Mercedes Benz S500 காரை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

அதுபோல, தஜிகிஸ்தானைச் சேர்ந்த நபர் முதல் முறையாக பெரிய பரிசை வென்றுள்ளார். துபாயில் வசிக்கும் தாஜிக் நாட்டவரான அப்துவாலி அக்மத் அலி, ஜனவரி 16 அன்று ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் 4226 என்ற எண்ணுக்கு $1-மில்லியன் பரிசை வென்றுள்ளார். எனவே, 1999 ஆம் ஆண்டு மில்லினியம் மில்லியனர் ப்ரோமோஷன் தொடங்கியதில் இருந்து $1 மில்லியன் பரிசாக வென்றவர்களின் வரிசையில் “தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முதல் நபர்” என்ற பெருமை இவரையேச் சேரும்.

அதேவேளை, இலங்கையின் காலியை பூர்விகமாகக் கொண்ட இலங்கை நபரான யாசஸ் நளின் பத்திரன BMW R 9T Pure மோட்டார் பைக்கை வென்றுள்ளார். இதுவரை, 49 நாடுகளைச் சேர்ந்த நபர்கள் $1 மில்லியனை ப்ரோமோஷனில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT