ADVERTISEMENT

அமீரகத்திற்கு பயணிப்பவர்கள் குறிப்பிட்ட திர்ஹம்களுக்கு மேல் பணம் அல்லது பொருள் வைத்திருந்தால் கட்டாயம் இதை செய்ய வேண்டும்.. ICA அறிவுரை..!!

Published: 15 Feb 2023, 5:48 PM |
Updated: 15 Feb 2023, 5:58 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் பயணிகளுக்கு முக்கிய நினைவூட்டலை வழங்கியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய சுங்கச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சுங்க நடைமுறைகளை அமீரகம் வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஃபெடரல் ஆணையம் வழங்கியுள்ள நினைவூட்டலின்படி, UAE க்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் 60,000 திர்ஹம்களுக்கு மேல் அல்லது அதற்கு நிகரான தொகை, நாணயங்கள், நிதி சொத்துக்கள், விலைமதிப்புள்ள உலோகம் மற்றும் கற்கள் போன்றவற்றை வைத்திருந்தால் அதை சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு பண வரம்பு எதுவும் இல்லை எனினும், 60,000 திர்ஹம்களுக்கு மேல் இருக்கும் தொகையை அதிகாரிகளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், UAE-யின் வெளிப்படுத்தல் முறையின்படி (Disclosure system), 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், நாட்டிற்குள் மற்றும் வெளியே பயணிக்கும்போது, ​​60,000 திர்ஹம் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தால் அவற்றை சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் எடுத்துச்செல்ல உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல, ஆணையம் குறிப்பிட்டுள்ள வரம்பை மீறும் எந்தவொரு பணத்தையும் நாட்டின் எல்லைகளைக் கடக்கும் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட ‘Afsah’ அமைப்பு அல்லது பிற வெளிப்படுத்தல் முறைகள் மூலம் பயணிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உட்பட 18 வயதிற்குட்பட்ட பயணிகள் கொண்டு செல்லும் பணம் மற்றும் பிற அதிக விலை மதிப்புடைய பொருட்கள், அவர்களின் பெற்றோர் அல்லது உடன் வரும் வயது வந்த குடும்ப உறுப்பினர்களின் குறிப்பிடப்பட்டுள்ள பண வரம்பில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை பயணிகளுக்கு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அவர்களது பணம் மற்றும் பிற விலைமதிப்பான பொருள்கள் அல்லது தங்கம், வைரம் போன்ற அதிக விலையுடைய பொருள்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லும்போது, அதிகாரிகளிடம் எளிய முறையில் தெரிவிக்க மற்றொரு வசதியும் உள்ளது. எனவே, பயணிகள் அவர்கள் எடுத்துச் செல்லும் விலையுயர்ந்த அல்லது அதிகத் தொகையை பயணத்திற்கு முன்னதாகவே ICA இணையதளம் மற்றும் அதன் ஸ்மார்ட் மொபைல் அப்ளிகேஷன்மூலம் அதிகாரிகளிடம் வெளிப்படுத்திக் கொள்ளலாம்  என்று கூறப்பட்டுள்ளது.