ADVERTISEMENT

துபாய் மெட்ரோ நிலைய லிஃப்ட்களில் இரு நபருக்கு மேல் பயணிக்க தடை..!! RTA அறிவிப்பு..!!

Published: 15 May 2020, 12:33 PM |
Updated: 15 May 2020, 12:45 PM |
Posted By: jesmi

துபாயில் அனைத்து மெட்ரோ சேவைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து RTA வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, மெட்ரோ நிலையங்களில் இருக்கும் லிஃப்ட்களில் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயன்படுத்த தடைசெய்யப்படுவதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று மே 15, வெள்ளிக்கிழமை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொது போக்குவரத்து மற்றும் பிற பொது இடங்களில் கொரோனாவிற்கு எதிரான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பான நடைமுறைகள் குறித்த விளக்க படங்களையும், ஒருங்கிணைந்த அடையாளங்களையும் துபாய் அரசாங்கம் அறிவித்திருந்தது.

மேலும் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பவர்கள் முகமூடிகளை அணிவது மற்றும் உடல் ரீதியான சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்க ஐகான்கள் மற்றும் வண்ணங்களைப் செயல்படுத்தியுள்ளது. அதனுடன் கையுறைகளை அணிவது, ஸ்டெர்லைசர்களைப் பயன்படுத்துவது, கை கழுவுவது போன்ற நல்ல நடைமுறைகளை ஊக்குவிக்கவும் RTA பொது போக்குவரத்து பயணம் தொடர்பான வழிமுறைகளை கடந்த மாதம் முதல் செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT