ADVERTISEMENT

துபாய்: குடியிருப்பாளர்களுக்கு அலர்ட் விடுத்த RTA! நாளை மூடப்படும் சாலைகளின் பட்டியல் இதோ…

Published: 18 Feb 2023, 12:30 PM |
Updated: 18 Feb 2023, 2:18 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வாகன ஓட்டிகளுக்கான முன்னறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. நாளை பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ள The Spinneys Dubai 92 Cycle Challenge என்ற பந்தயம் நடைபெற உள்ளதால் நகரத்தில் சில சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், இந்த சைக்கிள் பந்தயமானது ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்கு முடிவடையும் என்பதால், பந்தயத்தின் காரணமாக மூடப்படும் சாலைகளின் பட்டியலையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தற்காலிகமாக மூடப்படும் சாலைகள்:

ADVERTISEMENT
  • Dubai Sports City to Hessa St.
  • Al Asayel St.
  • Garn Al Sabkha St.
  • First Al Khail Rd.
  • Al Khamila St.
  • Sheikh Zayed Bin Hamdan Al Nahyan St.
  • Dubai Expo City
  • Global Village

மேலும், சைக்கிள் ஓட்டுபவர்கள் அவர்களது பந்தயப் பாதையில் செல்லும்போது, போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் ரவுண்டானாக்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று எச்சரித்துள்ள RTA, பந்தயத்தின் கடைசி போட்டியாளர் கடந்து சென்றவுடன், சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளது.

எனவே, பட்டியலிடப்பட்ட சாலைகளை தவிர்த்து மாற்று வழியை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT