ADVERTISEMENT

UAE: அபுதாபியின் பல்வேறு கடைகளில் இன்று தீவிபத்து..!! காவல்துறை தகவல்..!!

Published: 24 Feb 2023, 12:18 PM |
Updated: 24 Feb 2023, 12:37 PM |
Posted By: Menaka

அபுதாபி எமிரேட்டில் இருக்கும் அல் தஃப்ரா பகுதியில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி காவல்துறை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த தீ விபத்து குறித்த தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுக்கள் விரைந்து வந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கலீஃபா பின் சையத் சர்வதேச சாலையில் (Khalifa bin Zayed International Road) உள்ள கடைகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி குடிமைத் தற்காப்பு ஆணையம் (Abu Dhabi Civil Defense Authority) நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீயானது அணைக்கப்பட்டு தற்பொழுது குளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்த சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பும்படி குடியிருப்பாளர்களை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

விபத்து குறித்து வெளியாகும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், காவல் துறை மற்றும் மீட்புக் குழுவின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொள்வதாக காவல்துறை கூறியுள்ளது.