ADVERTISEMENT

UAE: காலாவதியான விசா, ஆவணங்களை கொண்ட நபரா? உங்களுக்கான பொன்னான வாய்ப்பு இதோ.. விசா தொடர்பான சிக்கல்களை தீர்க்க புதிய பிரச்சாரம்..

Published: 25 Feb 2023, 6:34 PM |
Updated: 25 Feb 2023, 6:37 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்பவராக இருந்தால், அதற்கான தீர்வைப் பெற பொன்னான வாய்ப்பு உங்களைத் தேடி வரவுள்ளது. ஆம், ‘A Homeland for All’ என்ற தலைப்பில் விசாவில் சிக்கல் உள்ள குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தீர்வு வழங்க மூன்று கட்டங்களாக பிரச்சாரம் நடத்த குடியுரிமை மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) நடவடிக்கை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பிரச்சாரம் குறித்து GDRFA தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், துபாயில் தங்கள் அனுமதியை மீறி தங்கியவர்கள், காலாவதியான ஆவணங்களைக் கொண்டவர்கள் மற்றும் விசாவில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக, பிப்ரவரி 25-ம் தேதி தேரா சிட்டி சென்டரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை GDRFA இன் அதிகாரிகள் இருப்பார்கள் என்று அறிவித்திருந்தது. இருப்பினும், அதிகளவிலான கூட்டம் காரணமாக இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துவிட்டதாக GDRFA சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டம் மற்றும் மூன்றாவது கட்டம் நடைபெறும் நாள் மற்றும் பிரச்சாரம் நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், விசா தொடர்பான சிக்கல்களுக்கு தேர்வு காண விரும்புபவர்கள் இந்த பிரச்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் துபாயின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

GDRFA பதிவின்படி, நாட்டிற்குள் நுழைதல் மற்றும் குடியிருப்பு சட்டங்களுக்கு இணங்குதல் போன்ற நடைமுறைகளை குடியிருப்பாளர்கள் பின்பற்றுவதை இந்த பிரச்சாரம் ஊக்கப்படுத்தும் என நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் GDRFA இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சித் துறையின் இயக்குநரான லெப்டினன்ட் கர்னல் சேலம் பின் அலி அவர்கள் கூறுகையில், இந்த பிரச்சாரத்தை அச்சமின்றி குடியிருப்பாளர்கள் அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, அனுமதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவைத் தாண்டி 10 வருடங்கள் அதிகமாக தங்கியிருந்தாலும் எங்கள் அதிகாரிகள் உங்களுக்கான ஒரு தீர்வை வழங்குவார்கள் என்றும் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டப்படி, அனுமதிக்கப்பட்ட விசா காலத்தை விட அதிகமாக தங்கினால் ஒரு நாளைக்கு 50 திர்ஹம்கள் அபராதமாக விதிக்கப்படும். இது விசா ரத்துகளுக்கும் பொருந்துவதோடு மிகப்பெரிய அபராதங்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே, GDRFA-யின் இந்த பிரச்சாரம் அமீரகத்தில் உள்ளவர்களுக்கு விசா தொடர்பான ஏதேனும் சிக்கல்களை சரிசெய்ய வாய்ப்பளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.