ADVERTISEMENT

அமீரகவாசிகள் எமிரேட்ஸ் ஐடியில் சிம் கார்டு அல்லது மொபைல் எண் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படிக் கண்டறிவது..??

Published: 18 Mar 2023, 7:55 PM |
Updated: 18 Mar 2023, 8:13 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நபர்கள் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களையும் சரிபார்க்க ‘Hesabati’ என்ற டிஜிட்டல் சேவையைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது அமீரகத்தின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் பெயரில் தவறான சிம் கார்டுகள் உள்ளதா என்பதை சரிபார்க்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தால் (Telecommunications and Digital Government Regulatory Authority – TDRA) வழங்கப்படும் இந்த சேவையானது இலவசம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘Hesabati’ சேவையும் அதன் பயன்பாடும்:

அமீரகத்தில் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியைக் கொண்டவர்கள் மட்டுமே இந்த சேவையை அணுக முடியும். இதன் மூலம் அமீரகத்தில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களை தொடர்பு கொண்டு தங்களின் எமிரேட்ஸ் ஐடி எண்ணின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மொபைல் மற்றும் நிலையான தொலைபேசி எண்களையும் சரிபார்க்க முடியும்.

ADVERTISEMENT

TDRA இன் படி, ‘Hesabati’ என்பது தனிநபரின் எமிரேட்ஸ் ஐடியின் கீழ் அவரது கவனம் அல்லது ஒப்புதல் இல்லாமல் எந்த சிம் கார்டும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்து, எண்களின் தவறான பயன்பாட்டிற்கு எதிராக அவர்களைப் பாதுகாக்க பயன்படும் டிஜிட்டல் சேவையாகும்.

எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த டிஜிட்டல் சேவையை அணுக வேண்டுமெனில், முதலில் உங்களிடம் UAE பாஸ் இருக்க வேண்டும், இது குடிமக்கள் மற்றும் அமீரகத்தில் வசிப்பவர்களுக்கான தேசிய டிஜிட்டல் அடையாளமாகும்.

ADVERTISEMENT

1. TDRA முகப்புப் பக்கத்தைப் பார்வையிடுதல்: முதலில் https://tdra.gov.ae/en/ என்ற லிங்க்கை கிளிக் செய்து ‘Our Initiatives’ என்ற பகுதியில் உள்ள ‘Hesabati’ என்பதன் கீழ் ‘read more’ என்பதை கிளிக் செய்து ‘here’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2. பிறகு, உங்களின் UAE பாஸ் மூலம் உள்நுழைந்து ‘Create an account’ என்பதைத் தேர்வு செய்தால், TDRA மற்றும் UAE Pass தானாகவே உங்களுக்காக ஒரு கணக்கை உருவாக்கும்.

3. சில நிமிடங்களுக்குப் பிறகு, ‘Hesabati’ சேவையானது உங்களின் அனைத்து செயலில் உள்ள மொபைல் எண்கள் மற்றும் UAE சேவை வழங்குநர்களுடன் பதிவுசெய்யப்பட்ட நிலையான தொலைபேசி எண்களின் பட்டியலை உங்களுக்கு வழங்கும், இதில் Du, Etisalat மற்றும் Virgin Mobile ஆகியவை அடங்கும்.

4. மொபைல் எண், கணக்கு வகை (முன்பணம் செலுத்திய அல்லது போஸ்ட்-பெய்டு), உங்கள் மொபைல் ஃபோன் சந்தா திட்டம் மற்றும் உங்கள் மொபைல் ஃபோன் பதிவு காலாவதி தேதி (இது உங்களின் எமிரேட்ஸ் ஐடி காலாவதி தேதி போன்றது) போன்ற விவரங்கள் பட்டியலில் இருக்கும்.

5. பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கும் போது தெரியாத மொபைல் எண்ணைக் கண்டால், உங்கள் பெயரில் அங்கீகரிக்கப்படாத சிம் உள்ளது என்று அர்த்தம். எனவே, ‘Make A Complaint’ என்ற பொத்தானைக் கிளிக் செய்து மொபைல் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்து, சிக்கலின் விளக்கத்தைஉள்ளிட்டு ‘Submit’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. அதன் பிறகு, புகாரின் நிலையை கண்காணிப்பதற்கு ஒரு குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள், மேலும் மின்னஞ்சல் மூலம் TDRA உங்களை தொடர்பு கொள்ளும். அதுபோல, TDRA இன் கால் சென்டர் – 800 12 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

7. இல்லையெனில், நீங்கள் உங்கள் மொபைல் சேவை வழங்குனரை நேரடியாகத் தொடர்பு கொண்டு, உங்கள் பெயரில் அங்கீகரிக்கப்படாத சிம் கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர்களுக்குத் தெரிவிக்கலாம். எடிசலாட்டிற்கு – 800 101 என்ற எண்ணையும், Du – 800 155 என்ற எண்ணையும் மற்றும் விர்ஜின் மொபைலுக்கு ‘Virgin Mobile UAE’ என்ற செயலியையும் பயன்படுத்தலாம்.