ADVERTISEMENT

துபாய்: 5.22 மில்லியன் திர்ஹம்களைக் குவித்த ஃபேன்ஸி நம்பர் பிளேட்!! RTA நடத்திய ஏலம்…!!

Published: 21 Mar 2023, 4:13 PM |
Updated: 21 Mar 2023, 4:32 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 18) அன்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நடத்திய தனித்துவமான வாகன நம்பர் ப்ளேட்டுகளுக்கான ஏலத்தை நடத்தியது. இந்த ஏலத்தின் மூலம் மொத்தமாக 38.21 மில்லியன் திர்ஹம்களை RTA திரட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், 2023 ஆம் ஆண்டின் இந்த முதல்  ஏலத்தில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் 90 ஃபேன்ஸி நம்பர் பிளேட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய எண்கள் அந்தந்த ஏலதாரர்களின் வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பங்கள், சின்னங்கள், நிகழ்வுகள் மற்றும் மைல்கற்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று RTA தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் முதலிடம் பிடித்தது AA15 என்ற நம்பர் பிளேட் ஆகும். இது 5.22 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்கப்பட்டு முதலிடத்தைப் பிடித்த பிரீமியம் நம்பர் பிளேட்டாக மாறியுள்ளது. அடுத்ததாக, பிளேட் நம்பர் AA20, 3.78 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுபோல, R76 பிளேட் 1.88 மில்லியன் திர்ஹம்களுக்கு ஏலம் விடப்பட்டதுடன், 1.7 மில்லியன் திர்ஹம்களுக்கு Y55555 பிளேட் நம்பரும், 1.32 மில்லியன் திர்ஹம்களுக்கு X6666 நம்பரும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து இலக்க வகைகளைக் கொண்ட இந்த 112வது ஓபன் ஏலத்தில் ஏலம் எடுப்பதற்காக (AA-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z) போன்ற 90 ஃபேன்ஸி பிளேட்களை வழங்கிய RTA, பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பர் பிளேட் ஆர்வலர்களிடையே சம வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த திட்டங்களைப் பின்பற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.