ADVERTISEMENT

துபாய் : நாளை முதல் தனியார் அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதி..!! ஷாப்பிங் மாலிற்கும் கட்டுப்பாடு நீக்கம்..!!

Published: 2 Jun 2020, 2:54 PM |
Updated: 2 Jun 2020, 3:01 PM |
Posted By: jesmi

துபாயில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தடை செய்யப்பட்டிருந்த பல்வேறு செயல்பாடுகளும் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பீச், பார்க் உள்ளிட்ட பொது இடங்கள் மீதான தடை நீக்கம், அரசு அலுவலகங்கள் மீண்டும் திறப்பு, அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில், துபாயில் இருக்கக்கூடிய வணிக வளாகங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அனைத்தும் நாளை புதன்கிழமை (ஜூன் 3) முதல் 100 சதவீத ஊழியர்களின் எண்ணிக்கையில் செயல்படும் என துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழு இன்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT