ADVERTISEMENT

UAE: ஒரு மாதத்திற்குள்ளேயே 1 பில்லியன் திர்ஹம்களுக்கும் கூடுதலாக வசூல் செய்த ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம்!! ஷேக் முகம்மது ட்வீட்..!!

Published: 25 Apr 2023, 3:48 PM |
Updated: 25 Apr 2023, 4:10 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் ரமலான் மாதத்தில் பசியில் வாடுவோருக்கு உலகளாவிய அளவில் உணவை விநியோகிப்பதற்குத் தொடங்கிய ‘1 பில்லியன் மீல்ஸ் என்டோமென்ட்’ பிரச்சாரம் அதன் இலக்கையும் தாண்டி சுமார் 1.075 பில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகமாக வசூலித்ததாக அமீரக துணைத்தலைவர் அறிவித்துள்ளார். இந்த பிரச்சாரத்தை புனித ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக அவர் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

இது குறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் பதிவிட்ட ட்வீட்டில், இந்த பிரச்சாரத்தில் 180,000 க்கும் அதிகமானோர் பங்களித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தொண்டுக்கு பங்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றி மற்றும் பாராட்டுக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் மிகப்பெரிய ரமலான் நிலையான உணவு உதவி நிதியை நிறுவுவதற்கான இலட்சியத்தைக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு, ரமலான் 2021ல், ‘100 மில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அப்போது, 51 நாடுகளைச் சேர்ந்த 385,000 தனிநபர்கள், நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் பரோபகாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பாரிய நன்கொடைகள் மூலம், உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்காக சுமார் 220 மில்லியன் உணவை விநியோகித்தது.

ADVERTISEMENT

இதுபோலவே, ரமலான் 2020 இல் ’10 மில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் நடத்தப்பட்டது, இது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் முதல் மற்றும் மிகப்பெரிய ஒற்றுமையின் நிகழ்ச்சி ஆகும்.

மேலும், கடந்த ஆண்டு ‘1 பில்லியன் மீல்ஸ்’ பிரச்சாரம் தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அதன் இலக்கை எட்டியது. அவற்றில் நைஜீரியா, சூடான், அல்பேனியா, ஜோர்டான், எகிப்து, கிர்கிஸ்தான், லெபனான், இந்தியா, பாகிஸ்தான், லெபனான், கிர்கிஸ்தான், அங்கோலா, உகாண்டா, கொசோவோ, தஜிகிஸ்தான் உள்ளிட்ட 50 நாடுகளில் தேவைப்படுவோருக்கு சுமார் 320,868 நன்கொடையாளர்கள் உணவை வழங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் இனிஷியேட்டிவ்ஸ் (MBRGI) என்ற அமைப்பின் கீழ் எண்டோவ்மென்ட் நிதி பிரச்சாரம் செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து MBRGI-ன் பொதுச்செயலாளர் முகமது அப்துல்லா அல் கெர்காவி அவர்கள் கூறுகையில், “1 பில்லியன் மீல்ஸ் என்டோமென்ட்’ பிரச்சாரமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நம்பிக்கையை உருவாக்க, நாங்கள் செய்வது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த உணவு உதவி நிதி, பின்தங்கிய சமூகம் மற்றும் பசியில் வாடும் மக்களுக்கு உணவு விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.