ADVERTISEMENT

மே.19 முதல் துபாய் மெட்ரோவை இணைக்கும் மூன்று புதிய பேருந்துகள் இயக்கப்படும்.!! – RTA வெளியிட்டுள்ள விபரங்கள்..!!

Published: 16 May 2023, 11:39 AM |
Updated: 16 May 2023, 11:55 AM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மே 19 முதல் மூன்று புதிய மெட்ரோ இணைப்புப் பேருந்து வழித்தடங்களைத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 51 ரூட் பேருந்து அல் கைல் கேட் (al khail gate) மற்றும் பிசினஸ் பே (business bay) மெட்ரோ நிலையத்திற்கு இடையே பிசியான நேரங்களில் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

ADVERTISEMENT

அதுபோல, SH1 ரூட் பேருந்து துபாய் மால் மற்றும் சோபா ரியாலிட்டி (sobha reality) மெட்ரோ நிலையங்களுக்கு இடையே 60 நிமிட இடைவெளியி்ல் பயணிக்கும். அத்துடன் YM1 ரூட் பேருந்து UAE எக்ஸ்சேஞ்ச் (uae exchange) மெட்ரோ நிலையம் மற்றும் யிவு மார்க்கெட் இடையே 60 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

இதற்கிடையில், வேறு சில வழித்தடங்களையும் மேம்படுத்த இருப்பதாக RTA கூறியுள்ளது. அதுபற்றிய விபரங்களை கீழே காணலாம்.

ADVERTISEMENT

— பயண நேரத்தை குறைக்க ரூட் F47 துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் மெட்ரோ நிலையத்துடன் முடிவடையும். ஆகவே, துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் செல்வோர் தற்போதைய வழித்தடமான F51, F50, F48 மற்றும் F46 ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

— அடுத்ததாக, பயண நேரத்தைக் குறைக்க ரூட் 50 பேருந்து பிசினஸ் பே மெட்ரோ நிலையத்தில் முடிவடையும். எனவே அல் கைல் கேட் செல்லும் பயணிகள் புதிய ரூட் 51 ஐ தேர்வு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

— கூடுதல் குடியிருப்பு பகுதிகளுக்கு சேவை செய்யும் விதமாக, C15 பேருந்து அல் மம்சார் பீச் பார்க் பேருந்து நிறுத்தத்தை உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்படும்.

— கூடுதலாக, ரூட் E102 அல் ஜாஃபிலியா பேருந்து நிலையத்தில் முடியும் வரை நீட்டிக்கப்படும்.