ADVERTISEMENT

UAE: மறுசுழற்சி மெஷினில் பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் உணவு டெலிவரி சேவைகளில் தள்ளுபடி..!! பசுமையை ஆதரிக்க புதுமுயற்சி…!!

Published: 2 Jun 2023, 8:18 AM |
Updated: 2 Jun 2023, 8:54 AM |
Posted By: Menaka

உங்களிடம் தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கிறதா? அவற்றை மறுசுழற்சிக்கு கொடுப்பதன் மூலம், நீங்கள் பல்வேறு வெகுமதி மற்றும் சலுகைகளைப் பெறலாம். ஆம், அமீரகத்தில் இருக்கும் ராஸ் அல் கைமாவில் ஒரு புதிய பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அலுமினிய கேன்களை ரிவர்ஸ் வென்டிங் மெஷினில் (RVM) போடும் போதெல்லாம், அவர்களுக்கு உணவு அல்லது விநியோக சேவைகளுக்கான தள்ளுபடி வவுச்சர்கள் போன்ற சலுகைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

தூய்மை தொழில்நுட்ப நிறுவனமான Sparklo-வால் இயக்கப்படும் இந்த வென்டிங் மெஷின்கள் ராஸ் அல் கைமா பொருளாதார மண்டலத்தில் (Ras Al Khaimah Economic Zone – Rakez) நிறுவப்பட்டுள்ளன, இது மறுசுழற்சியை ஆதரிக்க குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறது.

மேலும், அல் ஹம்ரா தொழில்துறை மண்டலத்தில் (Al Hamra Industrial Zone) அமைந்துள்ள குடியிருப்பு சமூகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பிற இடங்களில் நிறுவப்படும் RVMகளை Sparklo அசெம்பிள் செய்யும்.

ADVERTISEMENT

இது குறித்து ஸ்பார்க்லோ நிறுவனர் மாக்சிம் கப்லெவிச் என்பவர் பேசுகையில், ஏற்கனவே கழிவு மாசுபாட்டின் தீங்கான விளைவுகளை மக்கள் அறிந்திருப்பதால், அதை நாங்கள் எடுத்துக் கூற வேண்டிய அவசியமில்லை என்றும், மறுசுழற்சி செய்வதை எடுடெயின்மென்ட் (edutainment) மூலம் எளிதான மற்றும் மகிழ்ச்சியான நடைமுறையாக மாற்ற விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மறுசுழற்சியை சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாக வலியுறுத்தவும், பிளாஸ்டிக் பிரச்சனைக்குக் காரணமான வேரை அகற்றவும் முயற்சிப்பதாக கப்லெவிச் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தொடர்ந்து மறுசுழற்சி நடவடிக்கை குறித்து பேசிய Rakez இன் குழு தலைமை நிர்வாக அதிகாரி ராமி ஜல்லாட் அவர்கள், “சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை வழங்கும் பசுமை சாம்பியனை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்பார்க்லோவின் குறிக்கோள் பாராட்டுக்குரியது மற்றும் அவர்களின் முன்னோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.