ADVERTISEMENT

வெளிநாட்டவர்களை ஈர்க்க ஓமானில் வரவிருக்கும் மூன்று பெரிய மெகா திட்டங்கள்..!! – சுற்றுலாவை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு..!!

Published: 4 Jul 2023, 7:16 PM |
Updated: 4 Jul 2023, 7:50 PM |
Posted By: Menaka

ஓமானின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சகம் (Ministry of Housing and Urban Planning) நாட்டில் மூன்று மெகா திட்டங்களை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் மூன்றும் சுல்தானேட்டில் உள்ள தோஃபர், முசந்தம் மற்றும் தெற்கு அல் பத்தினா ஆகிய கவர்னரேட்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் நடந்த கூட்டத்தில் இந்த மெகா திட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய மெகா திட்டங்களின் முன்மொழிவுகள் அனைத்தும் கவர்னரேட் ஒன்றில் செயல்படுத்தக்கூடிய வளர்ச்சித் திட்டத்திற்கான பல சமர்ப்பிப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

1. தோஃபரில் ரதத் (தூறல்) பொலிவர்டு (Rathath Boulevard)

  • திட்ட காலம்: 4 ஆண்டுகள்
  • திட்ட மதிப்பீடு: 40 மில்லியன் ஓமான் ரியால்கள்
  • இடம்: சலாலாவில் உள்ள இடின்
  • திட்டப் பகுதி: 470,000 சதுர மீட்டர் பரப்பளவு

இத்திட்டமானது, வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஓமானி பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான பொழுதுபோக்கு இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஒரு செயற்கை வாட்டர்வே, நீர் வசதி, உள்ளூர் மற்றும் சர்வதேச உணவு வகைகளை வழங்கும் சாப்பாட்டு நிறுவனங்கள், பல்வேறு தாவர வாழ்வைக் காண்பிக்கும் கல்வித் தோட்டம், திரையரங்குகள், வணிகப் பகுதிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான மையம் போன்றவை இந்த திட்டத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

2. தெற்கு அல் பதினாவில் உள்ள ரிமல் பார்க் (Rimal Park)

  • திட்ட காலம்: 2 ஆண்டுகள்
  • திட்ட மதிப்பீடு: 6.9 மில்லியன் ஓமான் ரியால்கள்
  • இடம்: அல் பாடினா விரைவுச்சாலை, ஒருங்கிணைந்த சேவை நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில்
  • திட்டப் பகுதி: 225,000 சதுர மீட்டர் பரப்பளவு

இந்த திட்டம் ஒரு விடுமுறை ஓய்வு, தீம் பார்க், ஏரியல் கேபிள்வே, மொபைல் உணவு விற்பனையாளர்கள், ஒரு வணிக வளாகம் மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும். குறிப்பாக, வேலை தேடும் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், நிலையான சுற்றுலாவை மேம்படுத்துவதும், அதேநேரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதும் இதன் நோக்கமாகும்.

ADVERTISEMENT

3. முசந்தத்தில் உள்ள ஏம்ஸ் பே டெவலப்மென்ட் (Aames Bay)

  • திட்ட காலம்: 1.9 மாதங்கள்
  • திட்ட மதிப்பீடு: 6.9 மில்லியன் ஓமான் ரியால்கள்
  • இடம்: நியாபத் லிமா
  • திட்டப் பகுதி: 68,700 சதுர மீட்டர் பரப்பளவு

இந்த திட்டத்தின் முதன்மை இலக்குகளாக முசந்தம் கவர்னரேட்டிற்குள் உள்ள பல்வேறு பகுதிகளை இணைப்பதும் மற்றும் பிராந்தியத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதும் ஆகும்.

ஓமானின் இந்த மூன்று மெகா திட்டங்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சகம் மதிப்பீடு செய்து ஒப்புதல் அளித்த பிறகு, நிதி அமைச்சகம் அவர்களுக்கு நிதி ஆதாரங்களை ஒதுக்கும். இது ‘ஓமன் விஷன் 2040’ இன் கீழ் நகர்ப்புற விரிவாக்கத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.