ADVERTISEMENT

UAE: அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்து.. ஏர்போர்ட் வருவதற்கு முன்னரே பாஸ்போர்ட், விசா செயல்முறையை முடிக்கும் வசதி..!! எதிஹாட் ஏர்வேஸ் வெளியிட்ட தகவல்..!!

Published: 23 Jun 2023, 1:55 PM |
Updated: 23 Jun 2023, 2:08 PM |
Posted By: Menaka

அமீரக விமான நிலையங்களில் ஈத் அல் அதா மற்றும் பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு இன்னும் ஒரு சில நாட்களுக்கு அதிகளவு பயணிகள் பயணிக்கவிருப்பதால் அபுதபியைத் தளமாகக் கொண்ட எதிஹாட் விமான நிறுவனம் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதாவது விமான நிறுவனமதின் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் செக்-இன் வசதி மூலம், பயணிகள் விமான நிலையத்தை அடைவதற்கு முன்பே பாஸ்போர்ட் மற்றும் விசா செயல்முறைகளை முடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், Auto Doc Check என்ற புதிய அம்சம் பயணிகள் விமான நிலையத்தில் தொந்தரவு இல்லாமல் பயண மற்றும் விசா தேவைகளை பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்வதாக விமான நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்களை இறக்கி வைக்க self-service bag drop வசதி இருப்பதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. இந்த சுய சேவை வசதியானது, பயணிகள் ஆன்லைனில் செக்-இன் செய்தவுடன், தடையின்றி பயணத்திற்குத் தயாராகவும், பேக் டேக்கை (bag tag) அச்சிடவும் மற்றும் இரண்டு நிமிடங்களுக்குள் தங்கள் பைகளை செயலாக்கவும் அனுமதிக்கின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், ஜூன் 20 முதல் செப்டம்பர் 30 வரை அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்க விமான நிறுவனம் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கினாலும் அல்லது பிற நாடுகளிலிருந்து இணைக்கப்பட்டாலும் (ஹஜ்) யாத்ரீகர்களை வரவேற்பதற்கு, அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரீகர்களுக்கான சிறப்பு செக்-இன் கவுண்டர்கள் மற்றும் பிரத்யேக ஹஜ் குழுவை எதிஹாட் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆன்லைன் செக்-இன் வசதி: 

கோடைவிடுமுறை அல்லது ஹஜ் யாத்திரை போன்ற பயணிகள் அதிகளவு பயணிக்கும் நேரங்களில், விமானங்களுக்கான எகானமி செக்-இன் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மினா சையது மற்றும் அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் (ADNEC) மொராஃபிக்கின் சிட்டி செக்-இன் வசதியையும் பயணிகள் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் ஆகஸ்ட் 19 வரை, அபுதாபியில் உள்ள இரண்டு வசதிகளில் ஏதேனும் ஒரு சிட்டி செக்-இன் செய்து முடித்த பயணிகள் 2,500 கெஸ்ட் மைல்களைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.