ADVERTISEMENT

அபுதாபி : வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் மீண்டும் அமலுக்கு வருவதாக அறிவிப்பு..!!

Published: 21 Jun 2020, 8:54 AM |
Updated: 21 Jun 2020, 12:03 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் கொரோனாவினால் ஏற்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அபுதாபியில் இருக்கக்கூடிய அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் வசூலிக்கப்படும் மாவாக்கிஃப் (Mawaqif) பார்க்கிங் கட்டணங்களை நிறுத்தி கட்டணம் ஏதுமின்றி இலவசமாக தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் என அபுதாபி போக்குவரத்து மையம் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

கொரோனா பரவலின் சவாலான காலங்களில் சமூக உறுப்பினர்களை பாதுகாக்கவும் அவர்களை ஆதரிக்கும் பொருட்டும் பார்க்கிங் கட்டணங்களை அபுதாபி போக்குவரத்துத் துறையானது மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது வரை அபுதாபியில் இருக்கக்கூடியவர்கள் கட்டணம் ஏதுமில்லாமல் இலவசமாக தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி காலை 8 மணி முதல் வாகனங்களுக்கான பொது பார்க்கிங் கட்டணம் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் எளிதில் பார்க்கிங் கட்டணங்களை செலுத்தும் வகையில் பல்வேறு முறைகளை மாவாக்கிஃப் செயல்படுத்தி வருகின்றது.

பயனாளர்கள் தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்தி பார்க்கிங் கட்டணங்களை செலுத்தலாம் என்றும் தங்கள் மொபைல் போனில் டார்ப் (Darb) அப்ளிகேஷன் மூலமாகவோ அல்லது எடிசலாட் (Etisalat) அல்லது டூ (Du) தொலைபேசி எண்களிலிருந்து 3009 என்ற எண்ணிற்கு SMS அனுப்புவதன் மூலமாகவோ (format: (city code and plate category) space (plate number) space (standard or premium parking) space (duration in hours)) மின்னணு முறையில் கட்டணங்களை செலுத்தி கொள்ளலாம் என்றும் பொதுமக்களை அபுதாபி போக்குவது துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

மவாகிஃப் பார்க்கிங் கட்டணங்களுக்கான நேரம் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் 12 மணி வரை இருக்கும் என்பதும் வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசம் என்பதும் நாம் அறிந்ததே.

பார்க்கிங் பகுதிகள் பிரீமியம் பார்க்கிங் (நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்கள்) என ஒரு மணி நேரத்திற்கு 3 திர்ஹம் என்பதன் அடிப்படையிலும் மற்றும் நிலையான பார்க்கிங் (நீலம் மற்றும் கருப்பு வண்ணங்கள்) ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம் அல்லது ஒரு நாளைக்கு 15 திர்ஹம் என்பதன் அடிப்படையிலும் வசூலிக்கப்படுகின்றன.

எவரேனும் மசூதிக்கு அருகில் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தொழுவதற்கு செல்வார் என்றால் அவருக்கு தொழுகைக்கான அழைப்பு வந்த நேரத்திலிருந்து 45 நிமிடங்களுக்கு இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு கட்டணமோ அபராதமோ விதிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.