ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்டின் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த தகுதியுடையவரா நீங்கள்..?? எப்படி தெரிந்து கொள்வது..?? ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்துவது எப்படி…??

Published: 4 Jul 2023, 5:56 PM |
Updated: 4 Jul 2023, 6:14 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) பயணிகள் தங்களது பயண நடைமுறைகளை எளிதில் மேற்கொள்வதற்காக ஸ்மார்ட் கேட்ஸ் அமைப்பானது செயல்பட்டு வருகிறது. அமீரக குடியிருப்பாளர்கள் இந்த ஸ்மார்ட் கேட்டைப் (Smart Gate) பயன்படுத்தினால், சில வினாடிகளிலேயே பாஸ்போர்ட் செயல்முறையை முடித்து விடலாம்.

ADVERTISEMENT

பலர் இந்த செயல்முறையை மேற்கொண்டு வந்தாலும் ஒரு சிலருக்கு இது குறித்த சந்தேகங்கள் இருக்கலாம். அதற்கு முன்னதாக, gdrfad.gov.ae என்ற துபாய் GDRFAஇன் இணையதளத்தில் உள்ள ‘Inquiry for Smart Gate Registration’ ஆன்லைன் சர்வீஸ் மூலம், நீங்கள் ஸ்மார்ட் கேட்ஸ்-ஐப் பயன்படுத்துவதற்கு தகுதியுள்ளவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்தலாமா என தெரிந்து கொள்வது எப்படி?

துபாய் ஏர்போர்ட்ஸில் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுச் சோதனைச் சாவடி வழியாகச் சென்ற பெரும்பாலான சர்வதேச பயணிகள் ஸ்மார்ட் கேட்ஸில் பதிவுசெய்யப்பட்டிருக்கலாம், இருப்பினும் நீங்கள் ஸ்மார்ட் கேட்டைப் பயன்படுத்தத் தகுதியுள்ளவரா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

அதற்கு முதலில், https://gdrfad.gov.ae/ என்ற லிங்க்கை கிளிக் செய்து GDRFA இணையதளத்தைப் பார்வையிடவும்.

முகப்புப் பக்கத்தில் ‘Inquiry for Smart Gate Registration’ என்ற சர்வீஸ்-ஐப் பார்க்கும் வரை ஸ்க்ரோல் செய்து, சிவப்பு நிறத்தில் உள்ள ‘Start Service’ என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

அடுத்து, பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  • ‘File Number’ – உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள விசா ஸ்டிக்கரில் அல்லது பார்வையாளராக நீங்கள் பெற்ற இ-விசாவில் ஃபைல் நம்பரைக் காணலாம். நீங்கள் கோப்பு எண்ணைத் தேர்வுசெய்தால், ‘Resident’ அல்லது ‘Permit’ என கோப்பு வகையைத் தேர்ந்தெடுத்து, விசா வழங்கிய எமிரேட்டைத் தேர்ந்தெடுத்து ஃபைல் நம்பரை உள்ளிட வேண்டும்.
  • UDB எண் அல்லது எமிரேட்ஸ் ஒருங்கிணைந்த எண் (Emirates Unified Number)
  • எமிரேட்ஸ் ஐடி எண்
  • பாஸ்போர்ட் எண் – நாடு மற்றும் பாஸ்போர்ட் எண்ணை உள்ளிடவும்.

அதன் பிறகு, உங்களின் பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களை உள்ளிடவும். பின்னர், ‘I’m not a robot’ என்ற கேப்ட்சாவைக் கிளிக் செய்து, ‘Submit’ பட்டனைக் கிளிக் செய்யவும்.

இறுதியாக, நீங்கள் ஸ்மார்ட் கேட் சேவைக்கு பதிவு செய்திருந்தால் ‘Record is registered. You can use Smart Gates.’ என்று  GDRFA-Dubai உங்களுக்குத் தெரிவிக்கும்.

எவ்வாறு ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்துவது?

  1. விமான நிலையத்தின் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்மார்ட் கேட்டில் நுழைந்து, ‘foot’ அடையாளம் வரையப்பட்டுள்ள இடத்தில் நிற்கவும்.
  2. அடுத்தபடியாக, முகக்கவசம், கண்ணாடிகள் மற்றும் தொப்பிகள் போன்ற உங்கள் முகத்தை மறைக்கும் எதையும் அகற்றவும். தேவைப்பட்டால் உங்கள் போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட் கையில் இருக்க வேண்டும்.
  3. பின்னர் உங்கள் பயோமெட்ரிக்ஸை சரிபார்க்க கேமராவின் மேல் உள்ள பச்சை விளக்கைப் பார்த்து, திரையில் காண்பிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  4. இறுதியாக, உங்கள் பயோமெட்ரிக்ஸ் அங்கீகரிக்கப்பட்டதும், ஸ்மார்ட் கேட்ஸ் திறக்கப்படும்.