ADVERTISEMENT

UAE: கொளுத்தும் வெயிலில் இருந்து டெலிவரி ரைடர்களைப் பாதுகாக்க அசத்தலான திட்டம்.. AC, வாட்டர் சப்ளை, மொபைல் சார்ஜிங் வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் ஓய்வு பகுதி…!!

Published: 5 Jul 2023, 6:26 PM |
Updated: 5 Jul 2023, 6:47 PM |
Posted By: Menaka

அபுதாபியில் கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து டெலிவரி ரைடர்கள் ஓய்வு பெறுவதற்காக சோலார் ஆற்றலில் இயங்கும் மூன்று ஓய்வு பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதுகாப்புக்கான அபுதாபியின் ஒருங்கிணைந்த குழுவானது சம்மர் டுகெதர் (Summer Together) என்ற பிரச்சாரத்தின் கீழ், பிராந்தியத்தின் பசுமை இலக்குகளை ஆதரிக்கும் அதே வேளையில், டெலிவரி ரைடர்களுக்கு ஓய்வெடுக்கும் இடங்களை வழங்க, மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் மற்றும் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான தலாபத்துடன் (Talabat) கைகோர்த்துள்ளது.

ADVERTISEMENT

ஸ்மார்ட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் (Smart Energy Solutions) மூலம் கட்டப்பட்ட இந்த தங்குமிடங்கள் 24 மணி நேரமும் இயங்கும் மற்றும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இவை ரிச்சார்ஜபிள் பேட்டரிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் பைக்குகளுக்கான நிழல் தரும் பார்க்கிங் பகுதி மற்றும் டயர் அழுத்தத்தை சரிபார்க்க ஏர் பம்ப் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

ADVERTISEMENT

குறிப்பாக, இந்த தங்குமிடங்கள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும், அத்துடன் வசதியான இருக்கைகள், வாட்டர் சப்ளை மற்றும் மொபைல் சார்ஜிங் போன்ற வசதிகளும் உள்ளன.

ADVERTISEMENT

பாதுகாப்புக் குழுவின் தலைவர் அப்துல்ரஹ்மான் அல் ஷிசாவி அவர்கள் கூறுகையில் டெலிவரி ரைடர்களைக் கையாளும் போது, ​​குறிப்பாக கோடை காலத்தில், பொறுமையாகவும் அன்பாகவும் இருக்குமாறு குடியிருப்பாளர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுபோல, இத்திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு கோடைகாலத்தில் வசதியான போக்குவரத்தை வழங்க, குளிரூட்டப்பட்ட மொபைல் பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் டெலிவரி ரைடர்களுக்கு இதே போன்ற ஓய்வு பகுதிகளை நிறுவும் திட்டத்தை துபாய் அறிவித்திருந்தது. அதன்படி, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எமிரேட்டில் மூன்று ஓய்வுடுக்கும் இடங்களை அமைப்பதற்கான டெண்டரை வழங்கியது.

இந்த நிலையங்கள் ஷேக் சையத் சாலையில் ஜெபல் அலி வில்லேஜ் ஃபெஸ்டிவல் பிளாசாவிற்கு அருகில், அல் முராகபாத் ஸ்ட்ரீட் 22 க்கு அடுத்துள்ள போர்ட் சயீத் மற்றும் அல் மனாமா ஸ்ட்ரீட்டுக்கு அருகிலுள்ள ராஸ் அல் கோர் இண்டஸ்ட்ரியல் ஏரியா 2 இல் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், சாலைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூன் மாதத்தில், அபுதாபி சாலைகளில் பெரும்பாலும் ஃபாஸ்ட் லேன் என அழைக்கப்படும் இடது புறப் பாதையை டெலிவரி பைக் ரைடர்ஸ் பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய விதிகளைக் கொண்டுவந்தது.

இதற்கு முன்பாக, ரைடர்களின் நல்வாழ்வை மேம்படுத்த துபாய் ரைடர்ஸ் கார்னர் இனிஷியேட்டிவ் (Riders’ Corner Initiative) என்ற நலத்திட்டத்தை மே மாதம் தொடங்கியது. இதன் மூலம், துபாய் ஹெல்த்கேர் சிட்டியில் (DHCC) டெலிவரி ரைடர்களுக்கு இலவசமாக உடல்நல பரிசோதனைகள், கண் பரிசோதனைகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.