ADVERTISEMENT

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டும் அமீரகவாசிகள்..!! இந்தாண்டு 100 பில்லியன் திர்ஹம்ஸை தாண்டும் என கணிப்பு..!!

Published: 5 Sep 2023, 8:16 AM |
Updated: 5 Sep 2023, 8:26 AM |
Posted By: Menaka

உலகளவில் ஆன்லைன் விற்பனையானது கொரோனாவிற்குப் பின் வேகமாக அதிகரித்துள்ளது. அதே போல் பெரும்பாலான மக்களும் ஆன்லைன் ஷாப்பிங்கிலேயே பெரிதும் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு ஆன்லைன் ஷாப்பிங் (online purchase) மட்டும் 100 பில்லியன் திர்ஹம்களைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிலும் இந்த 2023 ஆம் ஆண்டில் குளோபல் டேட்டாவின் 2023 நிதிச் சேவைகள் நுகர்வோர் கணக்கெடுப்பின்படி (Financial Services Consumer Survey), இ-காமர்ஸ் சேவைகளில் முதலாவது இடத்தில் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையானது 40.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவதாக, Apple Pay, PayPal மற்றும் Google Pay போன்றவை இருக்கும் என்றும் மேலும், இவை இந்த ஆண்டு மொத்தமாக 27.7 சதவீத இ-பேமன்ட் டிரான்சாக்ஷன்களை மேற்கொள்ளும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றையடுத்து வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் நேரடியாக பணம் செலுத்துதல் ஆகியவை அமீரக மக்களின் மூன்றாவது மற்றும் நான்காவது மிகவும் விருப்பமான பேமென்ட் முறைகளாக உள்ளன என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு, இ-காமர்ஸ் துறையானது அமீரகம் மற்றும் பிற மேம்பட்ட நாடுகளின் பொருளாதாரங்களில் அதீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதன் குறைந்த விலைகள், ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் எளிதில் கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் போன்றவற்றின் காரணமாக மக்கள் அதிகளவில் ஆன்லைனில் பொருட்களையும் உணவையும் வாங்குகின்றனர் என கூறப்படுகின்றது.

மேலும், Noon, Souq, Namshi, Talabat, Deliveroo மற்றும் இதுபோன்ற பிற அமீரக இ-காமர்ஸ் நிறுவனங்களின் வருகையும் சந்தை அளவை கணிசமாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, துபாயில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான இலவச மண்டலங்கள் (free zone), உள்ளூர் இ-காமர்ஸ் தொழிலை மேலும் மேம்படுத்துவதோடு, வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு அமீரகத்தின் இ-காமர்ஸ் சந்தை 18.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 92.4 பில்லியன் திர்ஹம்களை எட்டியுள்ளது. ஏனெனில், அதிக எண்ணிகையிலான நுகர்வோர் ஆஃப்லைனில் இருந்து ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறியுள்ளார்கள். இப்போது, இந்த எண்ணிக்கை 2023 இல் 16.4 சதவீதம் அதிகரித்து 107.6 பில்லியன் திர்ஹம்களை அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஐந்து வருடங்களாக அமீரகத்தின் இ-காமர்ஸ் துறையானது ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், முக்கியமாக இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிப்பதன் காரணமாக வளர்ச்சியை எட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் Black Friday மற்றும்  Cyber Monday போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஆஃபர் நிகழ்வுகளும் இ-காமர்ஸின் வளர்ச்சிக்கு உதவியதாக கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் மோகம்:

குளோபல் டேட்டாவின் 2023 நிதிச் சேவைகள் நுகர்வோர் கணக்கெடுப்பின்படி, அமீரக நுகர்வோர்களில் 88 சதவீதம் பேர் கடந்த ஆறு மாதங்களில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் 5 சதவீதம் பேர் மட்டுமே ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதுபோல, வட்டியில்லா தவணை செலுத்துதல், ரிவார்டு பாயிண்ட்கள், கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகள் உள்ளிட்ட பல்வேறு பலன்களின் காரணமாக, வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துவதை விரும்புகிறார்கள் என்பதும் குளோபல் டேட்டா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.