ADVERTISEMENT

ஓமானிலிருந்து சென்னைக்கு செல்லவிருக்கும் இரு விமானங்கள்..!! பயணம் செய்ய விரும்புவோர் நிரப்ப வேண்டிய படிவம்..!!

Published: 12 Jul 2020, 12:55 PM |
Updated: 12 Jul 2020, 12:59 PM |
Posted By: jesmi

ஓமானில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் நான்காம் கட்டத்தில் கூடுதல் விமானங்களை ஓமான் நாட்டிற்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்டுள்ள அந்த புதிய அட்டவணையில் இந்தியா செல்ல விரும்பும் நபர்கள் ஓமான் நாட்டிலிருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ள படிவத்தில் சென்று தங்களின் விபரங்களை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது இந்தியா தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் இருந்து இரு விமானங்கள் ஜூலை 18 மற்றும் ஜூலை 23 ஆகிய தேதிகளில் சென்னைக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய விரும்புபவர்கள் https://docs.google.com/forms/ என்ற லிங்கில் சென்று தாங்கள் செல்ல விரும்பும் விமானத்தை குறிப்பிட்டு அதில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிக்க விரும்பும் ஒவ்வொருவரும் தனித்தனியாக படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

படிவத்தை நிரப்பிய நபர்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்திடமிருந்து ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவுக்காக தொடர்பு கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT