ADVERTISEMENT

துபாயில் புரொஃபஷனல் டிரைவிங் பெர்மிட்டை இனி உடனடியாக பெறலாம்..!! RTA அறிமுகம் செய்துள்ள புதிய டிஜிட்டல் சேவை…!!

Published: 4 Oct 2023, 7:05 PM |
Updated: 4 Oct 2023, 8:30 PM |
Posted By: Menaka

துபாயில் ப்ரொஃபெஷனல் டிரைவிங் பெர்மிட்டைப் பெறுவதற்கு முயற்சிப்பவரா நீங்கள்..?? இனி அதற்காக நீங்கள் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் இதனை உடனடியாக பெறும் விருப்பம் உள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், RTA இன் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் உத்திகளின் ஒரு பகுதியாக, பெர்மிட் வழங்கும் செயல்முறையை முடுக்கி விட்டுள்ளதாக RTA இன் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் ஓட்டுநர் விவகார இயக்குனர் சுல்தான் அல் அக்ராஃப் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த புது முயற்சியின் மூலம், டாக்ஸி ஓட்டுநர்கள், சொகுசு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எப்படி விண்ணப்பிப்பது?

  • ஒரு இணைக்கப்பட்ட நிறுவனம் (affiliated company) RTA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மற்றும் அனுமதி கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • குறிப்பாக, ஓட்டுநர் துபாய் டிரைவ் அப்ளிகேஷனை பதிவிறக்கி, முன்பதிவை முடிக்க வேண்டும்.
  • இணைக்கப்பட்ட நிறுவனம் விண்ணப்ப நடைமுறைகளை முடித்தவுடன், ஓட்டுநர் உடனடியாக RTA-Dubai Drive செயலி வழியாக டிஜிட்டல் அனுமதியைப் பெறலாம்.

முக்கியமாக, அமீரகத்தில் உள்ள பஸ் ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், லிமோசின் ஓட்டுநர்கள் போன்ற பயிற்சி செய்யும் தொழில்முறை ஓட்டுநர்களுக்கு வாடிக்கையாளர்களின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும் சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதே இந்த முன்முயற்சியின் நோக்கம் என்று அல் அக்ராப் சுட்டிக்காட்டியுள்ளார்.