ADVERTISEMENT

துபாய்: அக்டோபர் 18 முதல் தொடங்கும் குளோபல் வில்லேஜ் சீசன்-28.. புத்தம் புதிய சர்கஸுடன் 40,000 நிகழ்ச்சிகள்..

Published: 10 Oct 2023, 3:23 PM |
Updated: 10 Oct 2023, 4:11 PM |
Posted By: Menaka

உலகெங்கும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் ஈர்ப்புகளில் ஒன்றான துபாய் குளோபல் வில்லேஜ் எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் தேதியன்று சீசன் 28க்காகத் திறக்க உள்ள நிலையில், நுழைவு டிக்கெட்டுகள் பற்றிய விவரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் புதிய சீசனுக்கான டிக்கெட் விலையானது 22.50  திர்ஹம்களில் இருந்து தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் துபாய் குளோபல் வில்லேஜின் ஆப் அல்லது இணையதளம் வழியாக வாங்கும் நுழைவு டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், இந்த முறை ‘Value’ மற்றும் ‘Any Day’ என இரண்டு வகையான டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. அதாவது, ‘Value’ வகை டிக்கெட்டுகள் வார நாள் வருகைகளை ஊக்குவிக்க ஞாயிறு முதல் வியாழன் வரை செல்லுபடியாகும் மற்றும் ‘Any Day’ வகையானது, வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் எந்த நாளிலும் பார்வையாளர்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான டிக்கெட் வகைகளுடன் குளோபல் வில்லேஜ் மேடைகளில் கண்கவர் நிகழ்ச்சிகளையும் பொழுதுபோக்கையும் இலவசமாக அனுபவிக்கலாம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய சீசனில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த ஆண்டு சீசனில், உலகம் முழுவதும் இருந்து 400 கலைஞர்கள் பங்கேற்க உள்ளார்கள் மற்றும் அவர்கள் 40,000 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குளோபல் வில்லேஜ் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி,  ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு வண்ணமயமான வானவேடிக்கை, ‘Toy Shop’ நிகழ்ச்சி மற்றும் முற்றிலும் புதிய சைபர் சிட்டி ஸ்டண்ட் ஷோ (Cyber City Stunt Show) போன்றவை இடம்பெற உள்ளன.

மேலும், இந்த சீசனில் புதிதாக சர்க்கஸ் குழு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏராளமான கலாச்சார நிகழ்ச்சிகள்:

இந்தாண்டு சீசனில் AAINJAA டிரம்மர் குழுவின் கச்சேரி, ‘Philippine troupe’ மற்றும் ‘America’s Got Talent’இன் முன்னாள் மாணவர்களான அர்பன் க்ரூவின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் , மும்பை நைட்ஸ் நடனம் என பெரியவர்களும், தி வொண்டரர்ஸ், பிஜே மாஸ்க்ஸ் மற்றும் பீட்டர் ராபிட் என குழந்தைகளும் பல்வேறு நிகழ்சிகளைக் கண்டுகளிக்கலாம்.

அதேபோல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஃப்யூஷன் ஜப்பான் குழுவின் சாகசம், பிப்ரவரியில், UKயைச் சேர்ந்த ‘Dhol Foundation’ வழங்கும் இசை நிகழ்ச்சியும் இந்த சீசனில் இடம்பெற உள்ளதாக குளோபல் வில்லேஜ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதன்முதலில் 1997 இல் துவங்கப்பட்ட குளோபல் வில்லேஜ், இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel