ADVERTISEMENT

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் தொடங்குவதற்கு முன்பே தினசரி 10,000 திர்ஹம்ஸ் வெல்லலாம்..!! பங்கேற்பது எப்படி..??

Published: 12 Oct 2023, 5:18 PM |
Updated: 12 Oct 2023, 5:46 PM |
Posted By: Menaka

துபாயில் இந்த வருடத்திற்கான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 29 வது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், அதன் ரேஃபிள்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளன. அதாவது, ப்ரீ-DSF (Pre-DSF) டிராவானது கடந்த அக்டோபர் 1 ம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 7 வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த டிராவில், தினசரி வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் 10,000 திர்ஹம் ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று துபாய் ஃபெஸ்டிவல் மற்றும் ரீடெய்ல் நிறுவனம் (Dubai Festivals and Retail Establishment -DFRE) அறிவித்துள்ளது.

DFRE வெளியிட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 8 ஆம் தேதி DSF தொடங்கும் போது, ​​இந்தப் பரிசு மடங்கு பத்து மடங்கு அதிகரிக்கும் என்றும் டிசம்பர் 8 முதல் ஜனவரி 14 அன்று ஷாப்பிங் ஃபெஸ்டிவல் முடியும் வரை வெற்றியாளர்கள் 100,000 திர்ஹம் ரொக்கப் பரிசைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், DSF மெகா ரேஃபிள், டிசம்பர் 9 முதல் ஜனவரி 14 வரை ஒவ்வொரு நாளும் சுமார் 200,000 திர்ஹம் மதிப்புள்ள Nissan Patrol V6 காரை வெல்லும் வாய்ப்பை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அதிர்ஷ்டஷாலி வெற்றியாளர் DSFஇன் முடிவில் 500,000 திர்ஹம் ரொக்கத்தை வெல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பங்கேற்பது எப்படி?

இந்த DSF ரேஃபிள்களில் பங்கேற்க விரும்புபவர்கள், துபாயில் உள்ள ENOC சேவை நிலையங்களில் அல்லது Idealz இணையதளம் அல்லது ஸ்மார்ட் ஆப் மூலம், 100 திர்ஹம்களுக்கு ரேஃபிள் டிக்கெட்டை வாங்கலாம். அதுமட்டுமின்றி, கோல்டு சூக் மற்றும் நகரம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கியோஸ்க்குகள் அல்லது மால்களில் இருந்தும் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

மேலும், அமீரகத்தில் உள்ள ஏதேனும் ZOOM அவுட்லெட்டுகள் அல்லது ENOC சேவை நிலையங்களுக்குச் சென்று ரேஃபிள்களில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ZOOM ஸ்டோர்களில் குறைந்தபட்சம் 25 திர்ஹம்கள் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் ரேஃபிள் கூப்பனைப் பெறலாம், இதனால் அவர்கள் ப்ரீ-DSF மற்றும் DSF 2024 ரேஃபிள்களுக்கான தினசரி டிராக்களில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஆட்டோப்ரோவில் (Autopro) 50 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் வாங்கினாலோ அல்லது Tasjeel இல் அந்தத் தொகை அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சில சேவைகளை அணுகினாலோ உங்களுக்கு ரேஃபிள் டிக்கெட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel