ADVERTISEMENT

அசுர வேகத்தில் வளர்ச்சியடையும் துபாயின் பொதுப்போக்குவரத்து நெட்வொர்க்!! 8 மாதங்களில் மட்டும் 1.8 மில்லியன் மக்கள் பயணம்..!!

Published: 30 Oct 2023, 8:03 PM |
Updated: 30 Oct 2023, 8:04 PM |
Posted By: Menaka

துபாயில் பெரும்பாலான மக்கள் பொதுப் போக்குவரத்து முறைகளையே விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் தினசரி 1.8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். அந்தளவிற்கு துபாயின் பொதுப் போக்குவரத்து மக்கள் மத்தியில் பிரபலமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 450 மில்லியன் பயணிகள் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இது 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 401 மில்லியனை ஒப்படுகையில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

துபாயில் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் துபாய் மெட்ரோ மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகும். இது 167 மில்லியன் பயணிகளால் பயன்படுத்தப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, எமிரேட்டின் டாக்ஸி சேவைகள் 130 மில்லியன் பயனர்களுடன் இரண்டாவது இடத்திலும், 111 மில்லியன் பயணிகளைக் கொண்டு பொதுப் பேருந்துகள் மூன்றாவது இடத்திலும் உள்ளது. கடல் போக்குவரத்து 11 மில்லியன் பயணிகளையும், துபாய் டிராம் 5.6 மில்லியன் மக்களையும் ஏற்றிச் சென்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

அதேபோல், இ-ஹெய்ல், ஸ்மார்ட் ரெண்டல்ஸ் மற்றும் பஸ்-ஆன் டிமாண்ட் உள்ளிட்ட பகிரப்பட்ட போக்குவரத்து வழிகள் சுமார் 26 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய் துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எதிர்வரும் நவம்பர் 1ஆம் தேதியன்று அதன் 18வது ஆண்டு விழா மற்றும் 14வது பொது போக்குவரத்து தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், இந்த புள்ளிவிவரங்களை அறிவித்துள்ளது.

‘Gym on the Go’ என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பொது போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

துபாயின் போக்குவரத்து நெட்வொர்க்:

எமிரேட்டைச் சுற்றியுள்ள மக்களின் பயணத்திற்கு துபாயின் பொதுப்போக்குவரத்து முதுகெலும்பாக மாறியுள்ளது. இத்தகைய போக்குவரத்து நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும், துபாய் RTA சுமார் 146 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான மெகா திட்டங்களின் வரிசையை மேற்கொண்டுள்ளது. இதில் துபாய் மெட்ரோ, டிராம், பேருந்துகள், பாரம்பரிய அப்ரா, ஃபெர்ரி மற்றும் வாட்டர் டாக்ஸிகள் போன்றவை அடங்கும்.

2006 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலத்தில், எமிரேட்டின் சாலை நெட்வொர்க் 8,715 இலிருந்து 18,768 லேன்-கிமீ வரை விரிவடைந்தது. அதேகாலகட்டத்தில், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் எண்ணிக்கை 129ல் இருந்து 988 ஆகவும், தரைப்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் எண்ணிக்கை (துபாய் மெட்ரோ மற்றும் டிராம் வசதிகள் உட்பட) 26ல் இருந்து 122 ஆகவும் அதிகரித்துள்ளது.

பசுமையான போக்குவரத்து:

கடந்த மே மாதம், RTA அதன் ‘Zero-Emissions Public Transportation in Dubai 2050’ மூலோபாயத் திட்டத்தை வெளியிட்டிருந்தது. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது மற்றும் காலநிலை மாற்றத்தின் நெருக்கடியைத் தணிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், 2050 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத பொதுப் பேருந்துகளை மின்சாரமாகவும், 2040க்குள் ஹைட்ரஜனால் இயங்கும் வாகனமாக மாற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel