ADVERTISEMENT

துபாயில் கேமிங் துறையில் 30,000 வேலைகளை உருவாக்கும் புதிய திட்டம்..!! திட்டம் பற்றி விவரித்த துபாயின் பட்டத்து இளவரசர்..!!

Published: 4 Nov 2023, 8:26 AM |
Updated: 4 Nov 2023, 8:29 AM |
Posted By: Menaka

துபாயில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கவும் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இப்போது ‘துபாய் ப்ரோக்ராம் ஃபார் கேமிங் 2033’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கேமிங் துறையின் பங்களிப்பை கணிசமாக உயர்த்துவது மற்றும் உலகளாவிய கேமிங் துறையில் முதல் 10 நகரங்களில் துபாயை நிலைநிறுத்துவது போன்றவை இத்திட்டத்தின் இலக்குகளாகும்.

மேலும், இதன் மூலம் கேமிங் துறையில் 30,000 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான உயர் குழுவின் (Higher Committee for Future Technology and Digital Economy) கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தின்போது பேசிய ஷேக் ஹம்தான் அவர்கள், “ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, துபாய் உலகளவில் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நகரங்களில் ஒன்றாக இருப்பதை உறுதிசெய்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி நிறுவனங்களை ஈர்க்கும் திட்டம்:

துபாயின் புதிய கேமிங் திட்டமானது, உலகெங்கிலும் உள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் என்றும், குறிப்பாக டெவலப்பர்கள், டிசைனர்கள், புரோகிராமர்கள் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கேமிங் தொழில்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் தொடர்ந்து பேசுகையில், கேமிங் துறையில் உள்ள பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு துபாய் நல்ல நிலையில் உள்ளதாகவும், VR (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப போக்குகளின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

திறமை, உள்ளடக்கம், தொழில்நுட்பம்

இந்த திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஆதரிப்பதன் மூலமாகவும், இயக்கங்களைத் தொடங்குவதன் மூலமும் “talent, content, and tech” ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், உள்நாட்டிலும் உலக அளவிலும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்க உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல்வேறு முன்முயற்சிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டாவர்ஸ் முயற்சிகள்:

இந்த சந்திப்பில் ஷேக் ஹம்தான், துபாய் மெட்டாவர்ஸ் உத்தியின் ஒரு பகுதியாக, ‘Metaverse Alliance’, ‘Metaverse Guidelines’ மற்றும் ‘Metaverse Pioneers’ போன்ற முயற்சிகளையும் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

மெட்டாவர்ஸ் அலையன்ஸ்: இது பல்வேறு அரசு நிறுவனங்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் மெட்டாவேர்ஸ் உலகில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டார்ட்அப்களை உள்ளடக்கிய உலகளாவிய நெட்வொர்க் ஆகும்.

மெட்டாவர்ஸ் கைடுலைன்ஸ்: இது தாக்கத்தை ஏற்படுத்தும் மெட்டாவைரஸ் அப்ளிகேஷன்களை  அடையாளம் காணும் மற்றும் துபாய் அரசாங்க நிறுவனங்களுக்கு  metaverse இன் உகந்த பயன்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் வரையறுக்கவும் ஒரு விரிவான கட்டமைப்பை வழங்கும்.

மெட்டாவர்ஸ் பயோனிர்: இது துபாய் அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களின் தொழில்முறை திறன்களில் மெட்டாவேர்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அத்தியாவசிய திறன்கள் மற்றும் கருவிகளை வழங்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel