ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று முதல் இந்த வாரம் முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு..!! வானிலை மையம் தகவல்..!!

Published: 4 Nov 2023, 12:40 PM |
Updated: 4 Nov 2023, 12:42 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது நாட்டில் மேகமூட்டமான வானிலை நிலவி வரும் நிலையில், சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று, சனிக்கிழமை (நவம்பர் 4) முதல் புதன்கிழமை (நவம்பர் 8) வரை மழை பெய்யகூடும் என்பது தெரிய வந்துள்ளது.

அதேசமயம், நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை மழை பதிவாகும் என்றும் அமீரகத்தின் வானிலை தொடர்பாக NCM வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, நாட்டின் கடலோர மற்றும் உள் பகுதிகளில் இன்றும், இந்த வாரம் முழுவதும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வெப்பநிலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.  குறைந்தது 16ºC ஆகவும், அதிகபட்சமாக 36ºC ஆகவும் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நாள் முழுவதும் மிதமான காற்று வீசக்கூடும் மற்றும் சில சமயங்களில் புத்துணர்ச்சியுடனும், மணலுடன் கூடிய காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அமீரக மக்கள் வார இறுதி நாட்களை குளிர்ச்சியான வானிலையுடன் அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel