ADVERTISEMENT

துபாயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய நான்கு பாலங்கள்.. பயண நேரம் 70 சதவீதம் குறையும் என RTA தகவல்..!!

Published: 13 Nov 2023, 3:04 PM |
Updated: 13 Nov 2023, 3:05 PM |
Posted By: Menaka

துபாயில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இதனால் எமிரேட்டின் முக்கிய சாலைகளில் அதிகளவிலான போக்குவரத்து நெரிசலும், தாமதமும் ஏற்படுகிறது. எனவே, எமிரேட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த துபாய் அரசாங்கம் பல்வேறு சாலைத் திட்டங்களையும் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், துபாயில் புதியதாக ஒரு சாலை மேம்பாட்டுத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தற்சமயம் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், கூடிய விரைவில் இந்த திட்டம் முழுவதுமாக முடிக்கப்படும் என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

RTA வின் படி, கார்ன் அல் சப்கா – ஷேக் முகமது பின் சையத் சாலைகளில் (Garn Al Sabkha-Sheikh Mohamed Bin Zayed ) இன்டர்செக்சன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 3 கிமீ நீளமுள்ள நான்கு பாலங்கள் கட்டப்படும் என்றும், இது எமிரேட்டில் போக்குவரத்தை எளிதாக்குவதுடன் ஷார்ஜா உள்ளிட்ட முக்கிய காரிடார்களில் பயண நேரத்தை 70 சதவீதம் வரை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

நான்கு பாலங்கள்:

1. முதலாவது பாலம் கார்ன் அல் சப்கா மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட்களின் (Al Assayel Street) சந்திப்பில் கட்டப்படுகிறது. இந்த இருவழிப் பாலம் ஷேக் சையத் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலைகளுக்கு இடையே போக்குவரத்தை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

2. இரண்டாவது பாலம் கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டில் இருந்து மேற்கு நோக்கி ஷேக் முகமது பின் சையத் சாலையை நோக்கி கட்டப்படுகிறது. இது அல் குசைஸ் (Al Quassais) மற்றும் ஷார்ஜாவுக்குச் செல்லும் போக்குவரத்து ஓட்டத்தை சீராக்கும் என RTA குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

3. மூன்றாவது பாலம் ஷேக் முகமது பின் சையத் சாலையிலிருந்து வடக்கு நோக்கி கட்டப்படுகிறது. இது அல் யாலாயிஸ் சாலையை (Al Yalayis Road) நோக்கி ஜெபல் அலி போர்ட்டின் (Jebel Ali Port) திசையில் செல்லும் போக்குவரத்து நெரிசலை நீக்கும் என்று கூறப்படுகிறது.

4. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் நான்காவது பாலம், ஷேக் முகமது பின் சையத் சாலையிலிருந்து துபாய் புரொடக்சன் சிட்டி யின் (Dubai Production City) நுழைவாயில்களுக்குச் செல்லும் சர்வீஸ் சாலை வரையிலான போக்குவரத்து நெரிசலை நீக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாய் RTA ஆல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டம் ஷேக் சையத் சாலை (Sheikh Zayed Road) மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலைகளை (Muhammad Bin Zayed Road) இணைக்கும் கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

எனவே, இத்திட்டம் இரண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் பர்ஸ்ட் அல் கைல் (First Al Khail) மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட்களுக்கு (Al Assayel Street) இடையே தடையற்ற போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாலைகள் திறக்கப்பட்டதும், கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டில் இருந்து ஷேக் முகமது பின் சையத் சாலை வரை அல் குசைஸ் மற்றும் ஷார்ஜாவை நோக்கி செல்லும் வாகனங்களின் பயண நேரம் 40 சதவீதம் குறையும் என்று RTA கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பீக் ஹவர் பயண நேரத்தை 20 நிமிடங்களில் இருந்து வெறும் 12 ஆகவும், ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இருந்து அல் யாலாய்ஸ் சாலைக்கு ஜெபல் நோக்கி செல்லும் போக்குவரத்தின் பயண நேரத்தை 21 நிமிடங்களில் இருந்து 7 நிமிடங்களாகவும் குறைக்கும் என்றும் RTA கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel