ADVERTISEMENT

துபாயில் குளம் போல் தேங்கிய மழைநீர்.. விமான பயணிகள், வாகன ஓட்டிகள் தாமதத்தைத் தவிர்க்க RTA அறிவுரை….

Published: 17 Nov 2023, 6:58 PM |
Updated: 17 Nov 2023, 6:58 PM |
Posted By: Menaka

துபாயில் கனமழை வெளுத்து வாங்கியதால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியிருக்கின்றன. எனவே, வெள்ளநீரால் எமிரேட்டின் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து தாமதம் ஏற்படலாம் என்று துபாய் அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

குறிப்பாக, ஷார்ஜாவின் நுழைவாயிலில் உள்ள ஷேக் முகமது பின் சையத் சாலையில் வெள்ளநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அல் கைல் சாலை, எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் செயின்ட் ஆகியவற்றை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் கூறியுள்ளது.

மேலும், துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வழியாக பயணிக்கத் திட்டமிடும் வாகன ஓட்டிகளுக்கும், விமானத்தைப் பிடிக்கச் செல்லும் பயணிகளுக்கும் RTA சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைய விரும்பும் பயணிகள், தங்கள் பயணத் திட்டங்களுக்கு கூடுதலாக 4 மணிநேரம் ஒதுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

சீரற்ற வானிலையால், சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து தாமதம் ஏற்படலாம் என்றும், பயணிகள் டெர்மினல்கள் 1 மற்றும் 3 இல் அமைந்துள்ள விமான நிலைய மெட்ரோ நிலையங்களைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்குமாறும் RTA அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பயணிகள் தங்கள் பயணங்களை திறம்பட திட்டமிடுவதற்கு S’hail பயன்பாட்டைப் பயன்படுத்தலாம் என்றும் RTA பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையில், துபாயில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற, துபாய் காவல்துறை, துபாய் முனிசிபாலிட்டி மற்றும் நக்கீல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் தனது அவசரக் குழுக்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் RTA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel