ADVERTISEMENT

துபாய்: ஷேக் சையத் சாலையில் மூன்று நாட்களுக்கு போக்குக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகளை பகிரந்த RTA..!!

Published: 29 Nov 2023, 8:15 PM |
Updated: 29 Nov 2023, 8:27 PM |
Posted By: Menaka

அபுதாபியை நோக்கிய ஷேக் சையத் சாலையில், டிரேட் சென்டர் ரவுண்டானாவில் இருந்து எக்ஸ்போ சந்திப்பு வரை உள்ள போக்குவரத்தானது தற்காலிகமாக மாற்றப்பட்டு திசை திருப்பி விடப்படும் என்று துபாய் ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 1 முதல் 3, 2023 வரை மூன்று நாட்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே, இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் ஷேக் முகமது பின் சையத் சாலை, ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலை, எமிரேட்ஸ் சாலை, அல் கைல் சாலை, ஜுமைரா சாலை, அல் வாசல் சாலை மற்றும் அல் கைல் சாலை போன்ற மாற்றுச் சாலைகளைப் பயன்படுத்துமாறு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், வாகன ஓட்டிகள் தற்காலிக போக்குவரத்து மாற்றம் மற்றும் மாற்று வழிகள் குறித்து நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஸ்கிரீன்களில் காட்டப்படும் திசை அடையாளங்கள் மற்றும் தகவல்களை பின்பற்றுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றம், ஐக்கிய அரபு அமீரகத்தின் யூனியன் தின கொண்டாட்டங்கள் மற்றும் ஐநா காலநிலை மாற்ற மாநாட்டின் COP28 இன் ஹோஸ்டிங் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும், இந்த நாள்களில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காக, பொதுப் பேருந்து, மெட்ரோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகளை குடியிருப்பாளர்கள் தங்களின் பயணங்களுக்கு பயன்படுத்துமாறும் RTA பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

COP28 எக்ஸ்போ சிட்டி துபாயில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற உள்ளது. அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதல் மூன்று நாட்களுக்கு எக்ஸ்போ சிட்டிக்கு அருகில் உள்ள பகுதிகள் Blue zone மற்றும் Green zone என இரு பிரிவாக போக்குவரத்தை வழங்க உள்ளது.

அதுமட்டுமில்லாமல், COP28 பிரதிநிதிகளுக்கு சிறப்பு பதிப்பு Nol அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இது மாநாட்டின் போது அவர்கள் நாட்டில் பொது போக்குவரத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. நிகழ்வு நடைபெறும் இடத்தில் சீரான போக்குவரத்தை உறுதிப்படுத்த, RTA துபாய் மெட்ரோ, துபாய் பேருந்து மற்றும் டாக்சிகள் போன்ற பல்வேறு போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel