ADVERTISEMENT

ஓமான் : ஆகஸ்ட் 8 முதல் லாக்கடவுன் நீக்கம்..!! ஊரடங்கு நேரம் குறைப்பு..!! உச்சக்குழு தகவல்..!!

Published: 5 Aug 2020, 4:45 PM |
Updated: 5 Aug 2020, 4:47 PM |
Posted By: jesmi

ஓமானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை முன்னிட்டு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஜூலை மாதம் 25 ம் தேதி முதல் ஓமானில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் லாக்டவுன் விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் இருக்கக்கூடிய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி சனிக்கிழமை முதல் இந்த தடையானது நீக்கப்படும் என்று Covid-19 சுப்ரீம் கமிட்டி அறிவித்துள்ளதாக அந்நாட்டின் ஊடக நிறுவனம் (ONA) செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தற்பொழுது அமலில் இருக்கும் ஊரடங்கின் நேரம் குறைக்கப்பட்டு வரும் சனிக்கிழமை முதல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையிலான நேரங்களில் மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்பொழுது ஊரடங்கானது தினமும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டில் இருக்கும் மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தோஃபார் மாகாணத்தில் மட்டும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் தற்பொழுது இருப்பதை போன்றே லாக்டவுன் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT