ADVERTISEMENT

இன்று முதல் தொடங்கும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்.. ட்ரோன் காட்சிகள், ஒளி விளக்குகளால் களைகட்டும் துபாய்..!!

Published: 8 Dec 2023, 11:18 AM |
Updated: 8 Dec 2023, 11:18 AM |
Posted By: Menaka

அமீரகக் குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலமான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF) இன்று டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஷாப்பிங் பிரியர்களுக்கு குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு எண்ணற்ற தள்ளுபடிகளை வழங்கும் DSF, அடுத்த ஆண்டு ஜனவரி 14 வரை என 38 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்தாண்டு 29வது சீசனில் அடியெடுத்து வைக்கும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் துவக்கவிழாவை முன்னிட்டு இன்று நடைபெறவுள்ள நடனமாடும் ட்ரோன் காட்சிகள் மற்றும் லேசர் ஒளிக் காட்சிகள் துபாய் வானத்தை பிரகாசிக்கச் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அற்புதமான ஷாப்பிங் தள்ளுபடிகள், ப்ரோமோஷன்கள், ரேஃபிள் டிராக்கள், பாப்-அப் சந்தைகள், உணவு அனுபவங்கள், கலை நிறுவல்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் என பல கொண்டாட்டங்கள் இந்தாண்டின் DSFஇல் இடம்பெறும் என்றும் அதன் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்தகைய மாபெரும் ஷாப்பிங் நிகழ்வில் நீங்கள் அனுபவிக்கக்கூடிய சில முக்கிய இலவச நிகழ்வுகளும் உள்ளன. அவற்றைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

வண்ணமயமான விளக்குகள்:

DSFல் நடைபெறும் துபாய் லைட்ஸ் என்பது ஒரு பொது கலை நிகழ்ச்சியாகும். இங்கு பல்வேறு வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் கண்ணைக்கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இதனை பார்வையாளர்கள் இலவசமாக அணுகலாம்.

ADVERTISEMENT

அனூகி, ஊதப்பட்ட கதாபாத்திரங்கள்:

பிரெஞ்சு வடிவமைப்பாளர்களான Moetu Batlle மற்றும் David Passegand ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த காற்றினால் நிரப்பப்பட்ட கதாப்பாத்திரங்கள் அல் சீஃப் மற்றும் துபாய் டிசைன் மாவட்டத்தை (Dubai Design District) ஒளியூட்டும்.

ஒளிரும் படகுகள்:

துபாயின் பாரம்பரிய படகுகளான அப்ராக்கள் நியான் விளக்குகளில் ஒளிரும், சுமார் 40 அப்ராக்கள் துபாய் க்ரீக்கை வண்ணமயமாக ஒளிரச் செய்யும்.

நியான் உலகம்:

பழைய கோல்ட் சூக்கில், பார்வையாளர்கள் நியான் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தை வழியாக உலாவலாம்.

நடக்கக்கூடிய விளக்குகள்:

பாம் ஜுமைராவில் உள்ள மேற்கு கடற்கரையில், உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடுகளால் ஈர்க்கப்பட்ட அமேசானிய கிளிகளின் வாழ்க்கை அளவிலான நிறுவல்கள், சிக்கலான மலர் கலைப்படைப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நடக்கக்கூடிய ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ட்ரோன் நிகழ்ச்சி:

இந்த ஆண்டு ட்ரோன் நிகழ்ச்சி DSF இன் மிகவும் உணர்ச்சிமிக்க நிகழ்வாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். சுமார் 800 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் டிசம்பர் 10 முதல் ஜனவரி 14 வரை, ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு ப்ளூவாட்டர்ஸ் மீது வானத்தை இரண்டு முறை ஒளிரச் செய்யும்.

கார், பணம் மற்றும் தங்கம் வெல்லும் வாய்ப்பு:

  • IDEALZ DSF கிராண்ட் பரிசு 2 மில்லியன் திர்ஹம்ஸ்.
  • DSF மெகா ரேஃபிள் வெற்றியாளர்களுக்கு புத்தம் புதிய Nissan Patrol V6 காரை வழங்குகிறது.
  • துபாய் ஜூவல்லரி குழுமத்தின் ரேஃபிள் மூலம் 300 வாடிக்கையாளர்கள் மொத்தம் 25 கிலோ தங்கத்தை வெல்லலாம்.
  • துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் ரேஃபிள் ப்ரோமோஷன் மூலம் ஷாப்பிங் செய்து, 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை வெல்லலாம்.

கார்கள் அணிவகுப்பு:

டிசம்பர் 15 முதல் 24 வரை சிட்டி வாக்கில் நடைபெறும் எமிரேட்ஸ் கிளாசிக் வாகனத் திருவிழாவை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். அதேபோன்று ஜனவரி 4 முதல் 8 வரையிலான தேதிகளில் சிட்டி வாக்கில் துபாய் போலீஸ் கார்னிவல் நடைபெறும். வாகனங்களின் அணிவகுப்பை கண்டு ரசிக்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel