ADVERTISEMENT

புதுமையான AI கலைப்படைப்புகளுடன் பயணிகளை வரவேற்கும் துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 1..!!

Published: 8 Dec 2023, 7:53 PM |
Updated: 8 Dec 2023, 7:53 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) டெர்மினல் 1 வந்திறங்கும் சர்வதேச பயணிகளை வரவேற்க, அதன் நுழைவு வாயிலில் உள்ள பெரிய திரையில் உலகின் மிக நீளமான செயற்கை நுண்ணறிவில் (AI) உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகளவில் புகழ்பெற்ற கலைஞரான ரெஃபிக் அனடோல் என்பவரால் உருவாக்கப்ட்டுள்ள இந்த கலைப்படைப்பு, நீர், பவளம் மற்றும் தாவரங்களை உள்ளடக்கிய 400 மில்லியனுக்கும் அதிகமான பொதுவில் கிடைக்கும் இயற்கை தொடர்பான படங்களின் பரந்த தரவுத்தொகுப்பிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

COP28 நிகழ்வின் போது, நகரத்திற்கு வரும் பயணிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அனுபவத்தை வழங்குவதற்காக துபாய் ஏர்போர்ட்ஸ் மற்றும் வெளிப்புற விளம்பர நிறுவனமான JCDecaux உடன் இணைந்து ரெஃபிக் அன்டோல் இந்த வித்தியாசமான கலைசிற்பத்தை AI மூலம் படைத்துள்ளார்.

ADVERTISEMENT

கலை என்பது அருங்காட்சியகத்திலோ, கேலரியிலோ இருக்கக்கூடாது என்றும், அது எல்லோரும் ரசிக்கும் படி, விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் என எங்கும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ரெஃபிக் அன்டோல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வண்ணமயமான கலைப்படைப்பு துபாயைப் போலவே மிகவும் எதிர்காலம் சார்ந்தது மற்றும் நேர்மறையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Cop28 இல் கலந்து கொள்வதற்காக நாட்டிற்கு வந்திருக்கும் ரெஃபிக், “ஐ.நா.வின் ஒரு பகுதியாக நான் பல நாடுகளில் Cop பணியில் சேர்ந்துள்ளேன், ஆனால் இங்கு மக்கள் எந்த எதிர்மறையும் இல்லாமல் உண்மையிலேயே விவாதத்தில் இருப்பதை நான் முதன்முறையாகப் பார்த்தேன். துபாயில் தனக்கு நேர்மறையான அனுபவம் கிடைத்தது, இதை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

டெர்மினல் 1 வருகையில் சமீபத்தில் நிறுவப்பட்ட அதிநவீன ராட்சத திரைகளை ஒரு அசாதாரண கேன்வாஸாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்பு, பல நிலைகளில் உள்ள மக்களை ஊக்குவிக்கவும் இணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெஃபிக்கின் இதேபோன்ற கலைப்படைப்பு, Cop28 காலப்பகுதியில் ஒவ்வொரு இரவும் எக்ஸ்போ சிட்டியில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், துபாய் விமான நிலையத்தை துபாய் மற்றும் COP28 க்கான நுழைவாயில் என்று குறிப்பிட்ட இதன் ஏற்பாட்டாளர்கள், கிட்டத்தட்ட 65,000 சர்வதேச பிரதிநிதிகளை இந்த இடத்தின் வழியாக வரவேற்க உள்ளதாகவும், விருந்தினர்களை வரவேற்பதற்கு மட்டுமின்றி அவர்களை இடைநிறுத்தவும், பிரதிபலிக்கவும், கலையில் தங்களை மூழ்கடிக்கவும் இந்த வாய்ப்பை  பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel