ADVERTISEMENT

அமீரகத்தில் வானிலை மேகமூட்டமாக இருக்கும்…10ºC வரை வெப்பநிலை குறையும் என்று NCM அறிக்கை…

Published: 13 Dec 2023, 12:48 PM |
Updated: 13 Dec 2023, 12:48 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய தினம் ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், வெப்பநிலை கணிசமாகக் குறையும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், வியாழன் காலை லேசானது முதல் மிதமான காற்று வீசும் மற்றும் சில நேரங்களில் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, நாட்டின் உள் பகுதிகளில் 10ºC வரை வெப்பநிலை குறையும், அதேசமயம் அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை முறையே 29ºC மற்றும் 28ºC ஆக உயரும் என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், இன்றிரவு மற்றும் வியாழன் காலை சில உள் மற்றும் கடலோரப் பகுதிகளில் குடியிருப்பாளர்கள் ஈரப்பதமான வானிலையை உணரலாம் என்று மையம் கூறியுள்ளது.

அந்தவகையில், அபுதாபியில் 30 முதல் 70 சதவீதம் வரையிலும், துபாயில் 30 முதல் 75 சதவீதம் வரையிலும் ஈரப்பதத்தின் அளவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, அரேபிய வளைகுடாவில் மேற்கு நோக்கி இரவில் கடலில் நிலைமை சற்று மிதமாக இருக்கும் மற்றும் ஓமன் கடலில் சிறிது லேசாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel