ADVERTISEMENT

துபாயில் புத்தாண்டு தினத்தன்று டாக்ஸி கட்டணம் உயரும்.. RTA வெளியிட்டுள்ள அறிவிப்பு..!!

Published: 30 Dec 2023, 11:59 AM |
Updated: 30 Dec 2023, 11:59 AM |
Posted By: Menaka

துபாயில் புத்தாண்டு தினத்தன்று வானவேடிக்கைக் காட்சிகள் நடைபெறும் இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் டாக்ஸி சேவையின் புதிய ஃபிளாக் டவுன் ரேட் (குறைந்தபட்ச கட்டணம்) 20 திர்ஹம்ஸ் என நிர்ணயம் செய்யப்படுவதால், டாக்ஸி கட்டணம் உயரும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், டைனமிக் கட்டணங்கள் அசல் விலையை விட இரண்டு மடங்கு வரை அதிகமாக இருக்கும், இது புத்தாண்டு தினத்தன்று ஹாலா டாக்ஸி சேவைகளுக்கு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த கட்டணங்கள் டிசம்பர் 31, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வானவேடிக்கை நடைபெறும் இடங்களில் அமலில் இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயில் டாக்ஸி கட்டணங்கள் என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் டாக்ஸி வகை, பிக்-அப் இடம், பயண காலம் மற்றும் பயணித்த தூரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். சாதாரண நாட்களில் துபாயில் குறைந்தபட்ச டாக்ஸி கட்டணம் அல்லது ஃபிளாக் டவுன் ரேட் என்பது 12 திர்ஹம்ஸ் ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வேர்ல்டு டிரேட் சென்டர், எக்ஸ்போ சிட்டி மற்றும் குளோபல் வில்லேஜ் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் சர்வதேச மாநாடுகளின் போது வழக்கமான மீட்டர் டாக்சிகள் மற்றும் ஹாலா டாக்ஸி சேவை ஆகிய இரண்டிற்கும் புதிய குறைந்தபட்ச கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் RTA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

உலகம் முழுவதிலும் இருந்து துபாய்க்கு பயணிக்கும் குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையேயான டாக்ஸி பயண்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாகவும் RTA தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel