ADVERTISEMENT

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!!! துபாயின் குறிப்பிட்ட சாலையில் இன்று முதல் போக்குவரத்து தாமதம் ஏற்படும் என RTA அறிவிப்பு!!

Published: 10 Feb 2024, 11:55 AM |
Updated: 10 Feb 2024, 11:55 AM |
Posted By: Menaka

துபாயின் ஷேக் ரஷீத் சாலை மற்றும் அல் மினா சாலை இடையேயான சந்திப்பில் இன்று முதல் போக்குவரத்து தாமதம் ஏற்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள X தள பதிவில், இன்று, சனிக்கிழமை, பிப்ரவரி 10 முதல் திங்கட்கிழமை, பிப்ரவரி 12 வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு சாலைகளுக்கு இடையே நடைபெறும் சாலைப் பணிகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்களே இதற்குக் காரணம் என்றும் ஆணையம் விளக்கமளித்துள்ளது. RTA வெளியிட்ட அறிவிப்பின்படி, சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கும் பணி திங்கள்கிழமை காலை 6 மணி வரை நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை பாதுகாப்பாக அடைய திசை அடையாளங்களைப் பின்பற்றவும், ஷேக் கலீஃபா பின் சயீத் சாலை, 2nd டிசம்பர் ஸ்ட்ரீட், ஷேக் சயீத் சாலை போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT