ADVERTISEMENT

UAE: மழை காரணமாக ஷார்ஜாவில் சில சாலைகள் முழுவதுமாக மூடல்!!! மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

Published: 12 Feb 2024, 1:08 PM |
Updated: 12 Feb 2024, 1:09 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், பல்வேறு சாலைகளும், பள்ளமான பகுதிகளும் மழை நீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஷார்ஜா காவல்துறையின் கிழக்கு மாகாண காவல் துறை, கனமழை காரணமாக கல்பா நகரில் (முகமது பின் சையத் சிட்டி சந்திப்பு) சுற்றுவட்டச் சாலையை முழுவதுமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

ஆகவே, வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பள்ளத்தாக்குகள் மற்றும் அணைகள் பாயும் பகுதிகளை நெருங்குவதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான கட்டுமானப் பணிகள் காரணமாக கார்னிச் சாலையில் இருந்து மரியம் ஐலேண்டுக்கு செல்லும் சாலையை முழுமையாக மூடுவதாக ஷார்ஜாவில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த சாலை மூடல் பிப்ரவரி 12 திங்கள் முதல் ஆகஸ்ட் 13 செவ்வாய் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel