ADVERTISEMENT

UAE: நேரம் குறிப்பிடப்பட்ட போக்குவரத்து சிக்னல்களில் கார் என்ஜின்களை ஆஃப் செய்ய ஓட்டுநர்களுக்கு வலியுறுத்தல்… சுற்றுச்சூழலை மேம்படுத்த அஜ்மானின் புதிய முயற்சி..!!

Published: 19 Feb 2024, 7:50 AM |
Updated: 19 Feb 2024, 7:51 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் வாகனங்களில் வெளியேறும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் தொடர்ந்து பல உத்திகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அஜ்மானில் நேரம் குறிப்பிடப்பட்ட போக்குவரத்து சிக்னல்களில் நிறுத்தும்போது, ​​வாகனத்தின் இன்ஜின்களை அணைக்க ஓட்டுநர்களை ஊக்குவிக்க ‘Turn off the engine’ என்னும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அஜ்மானின் முனிசிபாலிட்டி மற்றும் திட்டமிடல் துறையின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி, நகரம் முழுவதும் பொருத்தப்பட்ட  நேரம் குறிப்பிடப்பட்ட போக்குவரத்து சிக்னல்கள், சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும் காலத்திற்கு இடையில் வாகன ஓட்டிகளுக்கு தங்கள் வாகனங்களை மறுதொடக்கம் செய்ய போதுமான நேரத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இது கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தி சாலையில் நிலைத்தன்மையை மேம்படுத்துதல், என்ஜினால் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அதிகாரிகளின் இந்த முன்முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது நகரில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

இது குறித்து அதிகாரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது அஹ்மத் பின் ஒமைர் அல் முஹைரி அவர்கள் பேசுகையில், இந்த முயற்சி அமீரகத்தின் நிலைத்தன்மை ஆண்டு கருப்பொருளுக்கு ஏற்ப வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இது ஓட்டுநர்களுக்கு வாகனம் ஓட்டும்போது நிலைத்தன்மையை ஆதரிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள், என்ஜினை முற்றிலும் எளிதாக நிறுத்தி மறுதொடக்கம் செய்யும் திறன் காரணமாக புதிய நடவடிக்கையை எளிதில் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel