ADVERTISEMENT

அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி.. பஸ் மற்றும் டாக்ஸி கட்டணம் அதிகரிப்பு..!!

Published: 4 Mar 2024, 1:59 PM |
Updated: 4 Mar 2024, 1:59 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயக் குழு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைப் பட்டியலை வெளியிட்டிருந்தது. முந்தைய விலைப் பட்டியலுடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் விலையானது பிப்ரவரி மாதத்தை விடவும் மார்ச் மாதத்தில் சற்று உயர்த்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

தற்போதைய இந்த விலை உயர்வின் தாக்கமானது அமீரகத்தின் சில எமிரேட்களில் உள்ள பொது போக்குவரத்து வசதிகளிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக, டீசல் விலையானது இம்மாதம் 17 ஃபில்ஸ் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து துபாய் மற்றும் ஷார்ஜா இடையே இயக்கப்படும் சில வழித்தடங்களில் பேருந்துக் கட்டணமானது மார்ச் 1ம் தேதி முதல் 3 திர்ஹம்ஸ் வரையிலும்  அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஷார்ஜாவில் உள்ள ரோல்லாவில் இருந்து அல் குஸ் (al quoz) வழியாக துபாயில் உள்ள மால் ஆஃப் தி எமிரேட்ஸ் வரை செல்லும் பேருந்து (பஸ் ரூட் 309) கட்டணம் கடந்த மாதம் 17 திர்ஹம்சாக இருந்தது. ஆனால் இப்போது மார்ச் மாதம் 3 திர்ஹம்ஸ் அதிகரித்து 20 திர்ஹம்ஸ் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், இன்டர்சிட்டி பஸ் ரூட் 616, சேருமிடத்தைப் பொறுத்து 3 திர்ஹம்ஸ் வரையிலும் அதிகரித்துள்ளது. குறுகிய தூரங்களுக்கு 8 திர்ஹம்ஸில் இருந்து 10 திர்ஹம்ஸ் ஆகவும், நீண்ட தூரங்களுக்கு 27 திர்ஹம்ஸில் இருந்து 30 திர்ஹம்ஸ் ஆகவும் பேருந்து கட்டணத்தின் விலை ஷார்ஜாவில்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 112, 114, 115, 116 போன்ற வழித்தடங்களிலும் பஸ் கட்டணம் 1 திர்ஹம்ஸில் இருந்து 3 திர்ஹம்ஸ் ஆகவும் உயர்ந்துள்ளன. இருப்பினும், 66 மற்றும் 333 ஆகிய வழித்தடங்களில் எவ்வித மாற்றமும் இன்றி கட்டணங்கள் முறையே 6 திர்ஹம்ஸ் மற்றும் 10 திர்ஹம்ஸ் என பழைய கட்டணமே வசூழிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

முன்னதாக, அஜ்மான் போக்குவரத்து ஆணையமும் மார்ச் 1ம் தேதி முதல் எமிரேட்டில் டாக்ஸி கட்டணத்தில் 4 ஃபில்ஸை அதிகரிப்பதாக அறிவித்திருந்தது. இதனால் அஜ்மானில் கடந்த மாதம் ஒரு கிலோமீட்டருக்கு 1.79 திர்ஹம்ஸ் வசூலிக்கப்பட்ட டாக்ஸி கட்டணம், இப்போது ஒரு கிலோமீட்டருக்கு 1.83 திர்ஹம்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2024க்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்:

ஒரு லிட்டர் சூப்பர் 98 வகை பெட்ரோல் அமீரகத்தில் தற்போது 3.03 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்படுகிறது, இது கடந்த பிப்ரவரியில் 2.88 திர்ஹம்சாக இருந்தது.

மேலும், பிப்ரவரியில் 2.76 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்பெஷல் 95 வகை பெட்ரோலானது, மார்ச் மாதம் லிட்டருக்கு 2.92 திர்ஹம் ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று இ-பிளஸ் 91 வகை பெட்ரோல் விலையானது 2.69 திர்ஹம்ஸில் இருந்து 2.85 திர்ஹம்களாகவும் இம்மாதம் அதிகரித்துள்ளது.

பெட்ரோலைப் போலவே, கடந்த மாதம் 2.99 திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்பட்ட டீசலும், மார்ச் மாதத்தில் 3.16 திர்ஹம்களாக உச்சத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel