ADVERTISEMENT

UAE: ரமலானில் உங்களின் வேலை நேரம் குறைக்கப்படவில்லையா? சட்டம் சொல்வது என்ன? எங்கு புகார் அளிக்கலாம்?

Published: 10 Mar 2024, 12:35 PM |
Updated: 10 Mar 2024, 12:35 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தில் ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது என்பது பல ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மார்ச் 4, 2024 அன்று, அமீரகத்தின் மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) இந்த வருட ரமலான் மாதத்திலும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் தினசரி இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்று அறிவித்தது.

ADVERTISEMENT

அமீரக அரசாங்கத்தின் இந்த ஆணைக்கு இணங்க உங்கள் முதலாளி உங்களின் வேலை நேரத்தில் 2 மணி நேரம் குறைக்க வேண்டும். அதாவது சாதாரன நாட்களின் வேலை நேரமான 8 மணி நேரத்தில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டு ரமலானில் 6 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வேலை நேரத்தைக் குறைக்கத் தவறினால் ஊழியர்கள் தங்கள் முதலாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு ரமலான் மாதத்தில் வேலை நேரத்தை 2 மணிநேரம் குறைக்க அனுமதிக்காதபோது, ஊழியர்கள் தங்கள் முதலாளிக்கு எதிராக எங்கு புகார் அளிக்கலாம் மற்றும் வேலைவாய்ப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

ADVERTISEMENT

உதாரணத்திற்கு, நீங்கள் துபாயைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 33 இன் வேலைவாய்ப்பு உறவுகளின் ஒழுங்குமுறை மற்றும் 2021 இன் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 33, வேலைவாய்ப்பு உறவுகளின் விதிமுறைகள் தொடர்பான 2022 ஆம் ஆண்டின் கேபினட் தீர்மானம் எண். 1 ஆகியவை உங்களுக்கு பொருந்தும்.

அமீரகத்தை பொருத்தவரை நாட்டில் பணிபுரியும் அனைத்து ஊழியருக்கும் ரமலான் மாதம் முழுவதும் தினசரி இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்ட வேலை நேரம் கிடைக்கும். இது 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண். 1 இன் கட்டுரை 15(2)ன் கீழ் வரும் வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 17(4) க்கு இணங்குகிறது.

ADVERTISEMENT

அதேபோன்று அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்ட அறிக்கையில், புனித ரமலான் மாதத்தில் தனியார் துறை ஊழியர்களின் வழக்கமான வேலை நேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்றும், நிறுவனங்கள் தங்கள் பணிச் சுமைகள் மற்றும் தன்மைக்கு ஏற்ப, தினசரி வேலை நேரத்தின் வரம்புகளுக்குள் நெகிழ்வான அல்லது தொலைதூர வேலை முறைகளைப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆகவே, மேற்கூறிய ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்ட விதிகள் மற்றும் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், ரமலானின் போது குறைக்கப்பட்ட வேலை நேரத்தைப் பெற நாட்டிற்குள் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமே உரிமை உள்ளது.

ஒருவேளை, அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டத்திற்கு உங்கள் முதலாளி இணங்கவில்லை என்றால், உங்கள் முதலாளிக்கு எதிராக மனிதவள அமைச்சகத்திடம் (MoHRE) நீங்கள் புகார் அளிக்கலாம். அவ்வாறு நீங்கள் அளித்த புகாரின் அடிப்படையில், MoHRE உங்கள் முதலாளிக்கு எதிராக தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel