ஐக்கிய அரபு அமீரக குடிமக்களும், அதேபோன்று நாட்டில் ரெசிடென்ட் விசாவில் வசிக்கக்கூடிய அனைத்து குடியிருப்பாளர்களும் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பது அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏனெனில், இது அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தால் (ICP) வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை ஆகும்.
மேலும், இந்த எமிரேட்ஸ் ஐடியை விசாவின் கால அளவை பொருத்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நாம் புதுப்பிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு உங்கள் எமிரேட்ஸ் ஐடி புதுப்பித்தல் செயல்முறையில் இருக்கும் போது, நம்மால் வெளிநாடு செல்ல முடியுமா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கலாம். இதற்கான விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.
நீங்கள் ரெசிடென்சி விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கிறீர்கள் என்றால், அமீரக குடியிருப்பாளராக நீங்கள் நாட்டிற்கு வெளியே பயணிக்கலாம். மேலும், குடியுரிமை அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தின் நகலையும் நீங்கள் எடுத்துச் செல்லலாம். இமிக்ரேஷன் கவுண்டரில் குடியுரிமை அட்டையைக் கேட்டால் இதனை அவர்களுக்குக் காட்டலாம்.
குறிப்பாக, இந்த UAE ரெசிடென்சி அடையாள அட்டை விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் உங்கள் எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிக்க விண்ணப்பித்த தேதி, விண்ணப்பித்தவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியும்.
அதுமட்டுமின்றி, அமீரக அரசாங்கத்தால் எமிரேட்ஸ் ஐடியின் நிலை குறித்த தகவலை ஆன்லைனில் அறிய விண்ணப்பக் கண்காணிப்பு வசதியும் (application tracking facility) வழங்கப்பட்டுள்ளதால், உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் தற்போதைய ஆன்லைன் நிலையையும் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு நீங்கள் காட்டலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel