ADVERTISEMENT

துபாய் மெட்ரோ நிலையங்களில் புதிய வகை டாப்-அப் மெஷின்கள்..!! பயணிகளின் வசதிக்காக TVM களை அப்கிரேட் செய்த RTA..!!

Published: 21 Mar 2024, 8:54 PM |
Updated: 21 Mar 2024, 8:54 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாயில் இருக்கக்கூடிய மெட்ரோ நிலையங்களில் உள்ள 262 டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் (Ticket Vending Machines-TVM) 165 இயந்திரங்களை அப்கிரேட் செய்துவிட்டதாக தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

RTA இந்த முயற்சியின் மூலம், நோல் கார்டை ரீசார்ஜ் செய்ய டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளை செயல்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியானது நோல் கார்டை ரீசார்ஜ் செய்ய டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளை செயல்படுத்த சாதனங்களை மேம்படுத்துவது மற்றும் இந்த சாதனங்களை நாணயம் மற்றும் பணமாக திரும்பப் பெறும் வகையில் மாற்றுவது என  இரண்டு குறிப்பிடத்தக்க இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதகக் கூறப்படுகிறது.

கூடுதலாக, குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட துபாய் மெட்ரோ பயனர்களின் திருப்தியை அதிகரிக்கவும் ஆணையம் முயற்சி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பயணிகள் இப்போது அவர்களின் பரிவர்த்தனை நேரத்தை 40 சதவீதம் வரை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பணமில்லா நோல் கார்டு டாப்-அப் இயந்திரங்களைப் (cashless nol card topup machines) பயன்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து RTA, ரயில் ஏஜென்சியின் ரயில் இயக்க இயக்குநர் ஹசன் அல் முதாவா (Hassan Al Mutawa) கூறுகையில், புதுப்பிக்கப்பட்ட இயந்திரங்கள் (TVM) ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான வண்ணங்களைக் கொண்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நிலையத்திலும் அவற்றை எளிதாகக் கண்டறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சாதனங்கள் பரிவர்த்தனை செயலாக்க நேரத்தை 40 சதவீதம் குறைப்பதுடன் பயணிகளுக்கு மென்மையான மற்றும் வசதியான அனுபவத்தை உறுதி செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இவ்வாறு பரிவர்த்தனை செயலாக்க நேரத்தை குறைத்து அணுகலை மேம்படுத்துவதன் மூலம், RTA அதன் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ரெட் மற்றும் கிரீன் லைன்ஸ் துபாய் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் இயந்திரங்களை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திர்ஹம் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இரண்டையும் இயந்திரங்களால் கையாள முடியும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

முக்கியமாக, வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், துபாய் மெட்ரோவில் டிஜிட்டல் முறைகளை பின்பற்றும் நோல் பயனர்களின் தற்போதைய 20 சதவீத பிரிவை அதிகரிக்க RTA திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel