ADVERTISEMENT

இந்தியர்கள் PhonePe ஆப் மூலம் இனி அமீரகத்திலும் பணம் செலுத்தலாம்.. புதிய வசதி அறிமுகம்.. எப்படி என்பது இங்கே..!!

Published: 2 Apr 2024, 8:37 PM |
Updated: 2 Apr 2024, 8:37 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 3.86 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இந்திய வெளிநாட்டவர்கள் ஆவர், இது அமீரகத்தின் மொத்த மக்கள்தொகையில் 38 சதவீதத்திற்கும் அதிகமாகும். இது தவிர, இந்தியாவிலிருந்து சுற்றுலா மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக நாள்தோரும் ஏராளமான இந்தியக் குடிமக்கள் அமீரகத்திற்கு வருகை புரிகின்றனர்.

ADVERTISEMENT

அவ்வாறு அமீரகத்தில் வசிக்கக்கூடிய இந்தியக் குடியிருப்பாளர்கள் அல்லது குறுகியகால பயணமாக அமீரகத்திற்கு வருகை புரியும் இந்தியர்கள் பயண்பெறும் வகையில், அமீரகத்திலும் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் பணம் செலுத்த தங்களின் ‘ஃபோன் பே (PhonePe)’ செயலியைப் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமீரகத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள PhonePe மூலம் பணம் செலுத்தும் இந்த வசதியானது, துபாயை தளமாகக் கொண்ட மஷ்ரிக் (Mashreq) வங்கிக்கும் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த PhonePe நிறுவனத்திற்கும் இடையேயான கூட்டாண்மையின் மூலம் சாத்தியமாகியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த கூட்டாண்மையின் படி, தற்போது அமீரகம் வரும் இந்தியர்கள் அமீரகத்தில் உள்ள சில்லறை கடைகள், சாப்பாட்டுக் கடைகள், சுற்றுலா மற்றும் ஓய்வுநேர இடங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் மஷ்ரிக் வங்கியின் NEOPAY டெர்மினல்களில் PhonePe மூலம் பரிவர்த்தனை செய்யலாம்.

அவ்வாறு நீங்கள் அமீரகத்தில் PhonePe ஆப் மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு முதலில் உங்கள் மொபைல் ஆப்பில் UPI இன்டர்நேஷனலை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன் பிறகு இதை எப்படி செயல்படுத்துவது, பின்னர் எப்படி பணம் செலுத்துவது என்பது பற்றிய விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

ADVERTISEMENT

PhonePe இன்டர்நேஷனலை எவ்வாறு செயல்படுத்துவது?

  • உங்கள் மொபைலில் உள்ள PhonePe பயன்பாட்டைத் திறந்து உங்கள் படத்தைத் (profile picture) தட்டவும்.
  • அதில் “Payment Settings” என்ற பிரிவின் கீழ் உள்ள “UPI International” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பிறகு, சர்வதேச UPI கட்டணங்களுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் வங்கிக் கணக்கிற்கு அடுத்துள்ள “Activate” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இறுதியாக, ஆக்டிவேஷன் செயல்முறையை முடிக்க உங்கள் UPI பின்னை உள்ளிடவும்.

UAE இல் PhonePe ஆப் மூலம் பணம் செலுத்துவது எப்படி?

  • நீங்கள் அமீரகத்தில் உள்ள எந்த Neopay டெர்மினலிலும், PhonePe பயன்பாட்டில் உள்ள QR ஸ்கேன் குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
  • உங்கள் வங்கியிலிருந்து கழிக்கப்படும் பற்று (account debit) விபரங்கள் இந்திய ரூபாயில் நடக்கும்.

அமீரகத்தில் வசிக்கும் இந்திய குடியிருப்பாளர்கள் PhonePe மூலம் எவ்வாறு பணம் செலுத்தலாம்?

  1. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் மொபைல் எண்களில் PhonePe செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. Neopay டெர்மினல்களில் ஆப்ஸ் மூலம் பணம் செலுத்த, அவர்களின் தற்போதைய NRE மற்றும் NRO கணக்குகளை அதில் இணைக்க வேண்டும்.

இதன் மூலம், அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் அமீரகத்திற்கு வருகை தரும் சுற்றுலாவாசிகளும் தங்களின் இந்திய வங்கிக் கணக்கிலிருந்து அமீரகத்திற்குள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel