ADVERTISEMENT

ஈத் விடுமுறைக்கு அமீரகக் குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் பயணிக்க சிறந்த 8 நாடுகள்..!!

Published: 4 Apr 2024, 2:32 PM |
Updated: 4 Apr 2024, 2:48 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஒரு வார கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் ஈத் விடுமுறையை வெளிநாடுகளில் கழிக்க திட்டமிட்டு வருகின்றனர். அவ்வாறு செல்ல விரும்புபவர்களுக்கு விசா செயல்முறையை முடிப்பது சற்று சிரமமாக இருக்கலாம்.

ADVERTISEMENT

ஆனால், அதற்கு மாற்றாக உலகின் பல்வேறு நாடுகள் அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அணுகலை வழங்குகின்றன. இதன் மூலம், குடியிருப்பாளர்கள் பரபரப்பான நகரங்கள் முதல் அமைதியான கடற்கரைகள் வரை விசா இல்லாமலேயே தங்கள் விடுமுறையை கழிக்கலாம். அவ்வாறு அமீரக குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் பயணிக்க சிறந்த 8 நாடுகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இலங்கை:

வெப்பமண்டலத்தில் இருந்து தப்பிச் செல்ல விரும்பும் பயணிகளுக்கு, இலங்கையின் வளமான நிலப்பரப்புகள், வரலாற்று கோயில்கள் மற்றும் கடற்கரைகள் சிறந்த அனுபவத்தை உறுதியளிக்கிறது. அமீரக குடியிருப்பாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ  இணையத்தளத்தின் வழியாக Electronic Travel Authorization-க்கு எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விருப்பம் உள்ளது. இந்த அங்கீகாரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு இது செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

சீஷெல்ஸ்:

ஏராளமான கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் இயற்கை இருப்புக்கள் மற்றும் ராட்சத அல்டாப்ரா ஆமைகள் போன்ற அரிய விலங்குகளின் தாயகமாக விளங்கும் சீஷெல்ஸ், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கடற்கரைக்கு செல்வோரை பெருமளவில் ஈர்க்கிறது. Vallee de Mai மற்றும் Aldabra Atoll போன்ற அதன் இயற்கை இருப்புக்களைக் கண்டறிவது சுற்றுலாப் பயணிகளுக்கு இணையற்ற அனுபவத்திற்கு உறுதியளிக்கும்.

ADVERTISEMENT

சவூதி அரேபியா:

சவூதி அரேபியாவின் வரலாற்று அடையாளங்கள் மற்றும் தளங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. ஆயினும் சவுதி அரேபியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட இடம் மஸ்ஜித்-அல்-ஹராம் ஆகும், இது மக்காவில் உள்ள ஒரு புனித தளமாகும்.

கிர்கிஸ்தான்

கிர்கிஸ்தானில் உள்ள பனி சிகரங்கள், உயரமான அல்பைன் புல்வெளிகள், தாவரங்கள் மற்றும் மலர்களின் வாசனைகளால் நிரப்பப்பட்ட பரந்த புல்வெளிகள், மலை ஆறுகள் மற்றும் ஏரிகள் இயற்கையை நேசிப்பவர்களுக்கு இந்த நாடு இடைவிடாத இயற்கைக் காட்சிகளை விருந்தளிக்கும்.

நீங்கள் மூச்சடைக்கக்கூடிய ஆலா-ஆர்ச்சா தேசிய பூங்கா (Ala-Archa National Park) வழியாக நடைபயணம் மேற்கொண்டாலும் அல்லது தலைநகரான பிஷ்கெக்கின் (Bishkek) கலகலப்பான சூழலில் மூழ்கி இருந்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் வளமான கலாச்சார பாரம்பரியங்களின் வசீகரிக்கும் கலவையை இங்கே அனுபவிக்கலாம். அத்துடன் அமீரகக் குடியிருப்பாளர்கள் வருகையின் போது வழங்கப்படும் விசாவுடன் இந்த மத்திய ஆசிய நாட்டில் அறுபது நாட்கள் வரை தங்க முடியும்.

மாண்டினீக்ரோ:

மாண்டினீக்ரோ உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றாகும், பார்வையாளர்கள் இங்கு ஏராளமான இயற்கை, வரலாற்று மற்றும் கலாச்சார கற்கள் மற்றும் பொக்கிஷங்களை ஆராயலாம். மேலும், அதன் கண்கவர் மலைகள், பனிப்பாறை ஏரிகள், புத்வா ரிவியராவின் நேர்த்தியான கடற்கரை ஓய்வு விடுதிகள், இடைக்கால கிராமங்கள் மற்றும் அதன் அட்ரியாடிக் கடற்கரையில் உள்ள குறுகிய கடற்கரைகள் என சுற்றுலாப் பயணிகளுக்கு விடுமுறையை நிம்மதியாக செலவிட இந்த நாடு வாய்ப்புகளை வழங்குகிறது.

இது அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு வருகையின் போது விசாவைப் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது, மேலும் நீங்கள் நாட்டிற்குள் நுழைந்த தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் 90 நாட்கள் வரை தங்க முடியும்.

ஜோர்டான்:

ஜோர்டான் வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த ஒரு நாடாகும். இங்கு உங்கள் நேரத்தை அனுபவிக்கவும், நாட்டின் பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இது ஒரு சிறந்த விடுமுறை இடமாகும். குறிப்பாக, இது பெட்ராவின் பாறை செதுக்கப்பட்ட கட்டமைப்புகள் போன்ற உலகின் மிகவும் குறிப்பிடத்தக்க பண்டைய அதிசயங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளது.

தாய்லாந்து:

தாய்லாந்து மிகவும் பிரமிக்க வைக்கும் சில இயற்கை காட்சிகளுக்கு பிரபலமானது ஆகும். குறிப்பாக தாய்லாந்தின் கடற்கரைகள் டைவிங், இரவு வாழ்க்கை, பார்ட்டி, பொழுதுபோக்கு மற்றும் பலவற்றை வழங்குகின்றன. பாங்காக்கின் புகழ்பெற்ற இரவு வாழ்க்கை துடிப்பான அனுபவத்தை வழங்கும். மேலும், கடற்கரை ஆர்வலர்களுக்கு, கோ ஸமுய் (Ko Samui) இணையற்ற ஓய்வையும் வழங்கும்.

ஆர்மீனியா:

UAE ரெசிடென்சி விசாக்களை வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கு ஆர்மீனியா ஒரு தனித்துவமான விசா-விலக்கு திட்டத்தை வழங்குகிறது. பொதுவாக, இந்தியர்கள் டிப்ளோமேட்களாக அல்லது வெளியுறவு அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் மட்டுமே ஆர்மீனியாவிற்குள் நுழைய முடியும்.

இருப்பினும், UAE உடனான ஒப்பந்தத்தின் படி, UAE ரெசிடென்சி விசாவைக் கொண்ட இந்தியர்கள் வருகையின் போது விசிட் விசாவிற்கு தகுதியுடையவர்கள். குறுகிய கால வருகையின் போது விசாவின் (short-stay visa on arrival) விலை தோராயமாக 20 திர்ஹம்ஸ் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel