ADVERTISEMENT

UAE: குடியிருப்பாளர்களின் வசதிக்காக ‘நான்-ஸ்டாப் பேருந்து’ சேவையை தொடங்கிய எமிரேட்..!!

Published: 9 Apr 2024, 3:59 PM |
Updated: 9 Apr 2024, 3:59 PM |
Posted By: Menaka

ராஸ் அல் கைமா எமிரேட்டில் பல்வேறு பகுதிகளை இணைக்கும் ‘RAK Ride’ என்ற இடைநில்லா விரைவு (Non-stop express) பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை பல்வேறு கட்டங்களில் எமிரேட்டில் உள்ள பல பகுதிகளுக்கு சேவை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் முதல் கட்டம் அல் கெயில் (Al Ghail) தொழில்துறை பகுதியை, அதென் (Adhen) பகுதி மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையம் வழியாக எமிரேட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள அல் நக்கீலுடன் (Al Nakheel) இணைக்கிறது.

அல் நகீல் நிலையத்திலிருந்து அல் கெயில் தொழிற்துறை நிலையத்திற்கு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் இந்த இடைநில்லா பேருந்தின் பயண நேரமானது சுமார் 45 நிமிடங்கள் வரை இருக்கலாம் என்றும் தெரிகிறது.

ADVERTISEMENT

ராஸ் அல் கைமாவில் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொதுப் போக்குவரத்து தீர்வுகளை மேம்படுத்தவும், எமிரேட்டில் பொதுப் பேருந்துப் போக்குவரத்து விருப்பங்களை பல்வகைப்படுத்தவும் RAKTA எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து RAKTAஇன் இயக்குனர் ஜெனெரல் எஸ்மெய்ல் ஹசன் அல் புளூஷி (Esmaeel Hasan Al Blooshi) பேசுகையில், புதிய சேவையானது எமிரேட்டின் 2030 மொபிலிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாகவும், வாடிக்கையாளர் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்தச் சேவையானது சிறிய, குறைந்த எரிபொருள் நுகர்வு பேருந்துகளை இயக்குவதன் மூலமும், நெகிழ்வான மற்றும் புத்திசாலித்தனமான திட்டமிடல் முறையைப் பின்பற்றுவதன் மூலமும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத போக்குவரத்து போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel