ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த மூன்று நாட்களில் அதிரடியாக உயர்ந்த கொரோனா பாதிப்புகள்..!! இன்று பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 700ஐ கடந்தது..!!

Published: 2 Sep 2020, 10:59 AM |
Updated: 2 Sep 2020, 11:11 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக 500 க்கும் அதிகமான நபர்கள் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 2, 2020) புதிதாக 735 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 71,540 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதிதாக 3 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இன்றைய நாளில் மட்டும் 538 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 62,029 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்காவிட்டால் அமீரகத்தில் கொரோனாவிற்கான இரண்டாம் கட்ட நிலை (Second Wave) உருவாகும் வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே அமீரகத்தின் சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இந்த நிலை தொடர்ந்தால், கொரோனா பரவ ஆரம்பித்த கால கட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த இயக்க கட்டுப்பாடுகள் போன்ற விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT