ADVERTISEMENT

அமீரக வங்கியில் கடன் பெற்றவரா.? தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க மத்திய வங்கி அனுமதி.. கனமழை பாதிப்பை முன்னிட்டு நடவடிக்கை..!!

Published: 23 Apr 2024, 8:14 AM |
Updated: 23 Apr 2024, 8:26 AM |
Posted By: Menaka

கடந்த வார தொடக்கத்தில் அமீரகத்தில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அமீரகவாசிகளின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி (CBUAE) நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

அதில் கனமழை எதிரொலியால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன் (personal loan) மற்றும் வாகன கடன்களின் (car loan) தவணைகளை திருப்பிச் செலுத்துவதை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம் என்று அமீரகத்தில் செயல்படும் வங்கிகளுக்கு அமீரகத்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஒத்திவைப்பிற்கு கூடுதல் கட்டணம், வட்டி அல்லது இலாபங்களை வங்கிகள் விதிக்காமல் இருக்க வேண்டும், அல்லது தவணைகளை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான கடனின் அசல் தொகையை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஏப்ரல் 16 அன்று நாடு முழுவதும் பெய்த கனமழையால் வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதத்திற்கு எதிராக காப்பீட்டு பாலிசி இருந்தால் அல்லது பொதுவாக ‘விரிவான காப்பீடு’ என குறிப்பிடப்பட்டால் காப்புறுதியின் கீழ் பாதுகாக்கப்படும் எனவும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் வீடுகளுக்கும் இது பொருந்தும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், காப்பீட்டின் கீழ் உள்ள வீடுகள் அல்லது கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும், சமீபத்திய மழை மற்றும் வானிலை காரணமாக ஏற்படும் சேதங்களிலிருந்து தங்கள் சொத்துக்களை சரிசெய்வதற்கு உரிமை உண்டு.

ADVERTISEMENT

குறிப்பாக, பொதுமக்கள் தங்களது காப்பீட்டு உரிமைகளைப் பாதுகாப்பதற்காக காப்பீட்டுக் கொள்கையை கவனமாகப் படித்துப் புரிந்து கொள்ளுமாறும் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது, மேலும் காப்பீட்டு நிறுவனத்துடன் ஏதேனும் புகார் அல்லது தகராறு இருந்தால், நிதி மற்றும் காப்பீட்டின் SANADAK ஐ அணுகுமாறும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel