ADVERTISEMENT

அபுதாபியில் திறக்கப்பட்ட முதல் வெர்டிபோர்ட்..!! வெற்றிகரமாக டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் செய்த பறக்கும் டாக்ஸி..!!

Published: 26 Apr 2024, 8:07 PM |
Updated: 26 Apr 2024, 8:12 PM |
Posted By: Menaka

அபுதாபியின் யாஸ் தீவில் பறக்கும் டாக்ஸி தரையிறங்குவதற்கான அமீரகத்தின் முதல் வெர்டிபோர்ட் திறக்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது. வெர்டிபோர்ட் என்பது ஓடுபாதையின் தேவையின்றி விமானம்  செங்குத்தாக புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஆதரவளிக்கும் ஒரு பிரத்யேக பகுதியாகும்.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடைபெற்ற DRIFTx மொபிலிட்டி நிகழ்வில், அபுதாபி முதலீட்டு அலுவலகம் (ADIO), அமீரகத்தின் இன் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) மற்றும் அபுதாபி மொபிலிட்டி (AD Mobility) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்துத் துறையின் துணை நிறுவனமான அபுதாபி (DMT), நாட்டின் முதல் வெர்டிபோர்ட்டை வெளியிட்டுள்ளது.

மேலும் அங்கு பறக்கும் டாக்சிகளின் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகிய இரண்டுமே வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டுள்ளது. அதாவது நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 25) காலை தொடங்கிய DRIFTx மொபிலிட்டி நிகழ்வில், அமீரகத்தின் முதல் வெர்டிபோர்ட் வசதிக்கான செயல்பாட்டு அனுமதியை GCAA அறிவித்ததை தொடர்ந்து தற்போது இந்த வெர்டிபோர்ட் வெற்றிகரமாக அமைக்கப்படுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், நேற்று மாலை 4.30 மணி முதல் 5 மணி வரையிலான நேரத்தில், இரண்டு பயணிகள் செல்லக்கூடிய 600 கிலோ எடை கொண்ட eVTOL விமானம் புறப்பட்டு, வானத்தில் பறந்து சுமார் 20-25 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இந்நிகழ்வில் பங்கேற்ற GCAAவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அபுதாபியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக வெர்டிபோர்ட் வசதியானது, GCAA அமைத்த சமீபத்திய தொழில் தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளதாகவும், இது புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் மூன்று தளங்களைக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் வெர்டிபோர்ட்கள்

AD மொபிலிட்டியின் இயக்குனர் ஜெனரல் அப்துல்லா அல் மர்ஸூகி, அபுதாபி முழுவதும் முக்கிய வணிக மையங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் உட்பட மூலோபாய இடங்களில் கூடுதல் வெர்டிபோர்ட்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து ADIO இன் டைரக்டர் ஜெனரல் பத்ர் அல்-ஒலாமா பேசிய போது, அபுதாபியின் வெர்டிபோர்ட் நெட்வொர்க் போக்குவரத்து கண்டுபிடிப்பு மற்றும் எதிர்கால இயக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் என்றும், போக்குவரத்து உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு விரிவான வணிக வாய்ப்புகளை உருவாக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel